நேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி

சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி, ”இந்தியா, தற்சார்பு நிலையை எட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனாவுக்கான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி உதவுவதை பார்த்து, பெருமைப் பட்டிருப்பார்,” என, குறிப்பிட்டார்.

மேற்குவங்கத்தில்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த நாள்விழா கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடந்தது. பிரதமர் மோடியும், முதல்வர் மம்தாவும் நீண்டநாளுக்குப்பின் ஒரேவிழாவில் இப்போதுதான் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேசியதாவது:நம் நாடு, தற்சார்பு நிலையை எட்டுவதை எந்தசக்தியாலும் தடுக்க முடியாது. நேதாஜி தற்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை, மற்ற நாடுகளுக்கும், நாம்வழங்கி உதவுவதை பார்த்து பெருமைப் பட்டிருப்பார்.

நேதாஜியின் பிறந்த நாள்விழா, இனி ஆண்டுதோறும், ‘பராக்கிரம திவஸ்’ எனப்படும், வீரதீரர் தினமாக கொண்டாடப்படும். நாட்டின் வீரத்துக்கு, அவர் உந்து சக்தியாக இருந்துள்ளார்.சுதந்திர போராட்டத்தின் போது, புதியவடிவத்தில், அதை நேதாஜி சந்தித்தார். நேதாஜியை உருவாக்கிய இந்தமண்ணுக்கு தலை வணங்குகிறேன்.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும், அவரதுதாக்கம் இருக்கும். சுதந்திரத்துக்காக அவர்செய்த தியாகங்கள், பங்களிப்பை, நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.எல்லை பிரச்னைகளில், இந்தியாவின் வலிமையை உணர்த்தும் புதியஅவதாரத்தை, உலக நாடுகள் பார்த்துவருகின்றன; இதற்கு, நேதாஜி விதைத்த வீரமே காரணம். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றால், தகுந்தபதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது.

பெண்களின் வளர்ச்சி, சுய முன்னேற்றத்துக்கும், நேதாஜி காரணமாக இருந்துள்ளார். பெண்களின் உரிமைகுறித்து பேசப்பட்ட காலத்தில், ராணி ஜான்சி படைப்பிரிவை உருவாக்கி, சுதந்திர போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தினார்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.

முன்னதாக, தேசியநூலகத்தில் உள்ள நேதாஜியின் சிலைக்கு, மோடி மலரஞ்சலி செலுத்தினார். இங்கு, 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உருவாக்கியுள்ள, 120 அடி நீள ஓவியத்தை பார்த்துரசித்தார். இதைத் தவிர, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...