புதுவையில் பாஜக 23 இடங்களை கைப்பற்றும்

புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி துரோகமிழைத்து விட்டார், புதுச்சேரியில் பாஜக 23க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சிஅமைக்கும் என்று பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்துதிட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என உறுதிதந்தார்.தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணமாக பாஜக தேசிய தலைவர் நட்டா வந்தார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார், அங்கிருந்து விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள விமானதளத்திற்கு இன்று வந்தார்.

அங்கு அவரை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்ததான் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்துகொடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நட்டா ஆளுநர் மாளிகை அருகில்உள்ள பாரதியார் சிலைக்கு வந்தார். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார், பின்னர் அங்கிருந்து மீண்டும் கார் மூலம் புறப்பட்டு ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் நமச்சிவாயம் ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் கடந்த 28- ம் தேதி தைப்பூசநாளில் பாஜகவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியதலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர்.

தற்போது புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் நட்டா முன்பாக நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பங்கேற்று பாஜகவில் இணைந்தனர். இதற்காக அவர்கள் பேருந்து, வேன், கார் ஆகியவற்றின் திரண்டனர். மேலும் மயிலாட்டம் ஒயிலாட்டம், கெண்டைமேளம், கொட்டு, தப்பாட்டம், ஆகியவற்றுடன் ஒவ்வொருதொகுதியில் இருந்தும் ஆதரவாளர்கள் பேனர்களை பிடித்தவாறு பொதுக் கூட்டத்துக்கு வந்தனர்.

அதேபோல் ஊசுடுதொகுதியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆதரவாளர்களும் கார் மற்றும் வேன்களில்வந்து கட்சியில் இணைந்தனர்.

இக்கூட்டத்தில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது

ஆன்மீக பூமியான புதுவைக்கு வந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் மத்திய பாஜக ஆட்சியில நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவையில் மத்தியஅரசால் 6 லட்சம் எல்இடி பல்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, 13 ஆயிரத்து 500 பெண்களுக்கு இலவச எரிவாயுஇணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 32 ஆயிரம் ஏழைபெண்களுக்கு ஜன்தன் வங்கிகணக்கு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முமுவதும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இலவச மருத்துவகாப்பீடு செய்யப்பட்டுள்ளது, புதுவையில் பிரதமர் மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் பயனடைகின்றனர், ஜிப்மருக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 100 கோடி மத்தியஅரசு நிதி வழங்குகிறது ஜிப்மர் கிளை காரைக்காலில் அமைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி 130 கோடி மக்களுக்கும் பல்வேறு புதியதிட்டங்களை உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். கரோனாவில ஒரே நாளில் 10 லட்சம் சோதனைகளை நாம் செய்துள்ளோம். ஆண்டுக்கு 3 லட்சம் வெண்டிலேட்டர்களையும் கோவிட் கிட்டுகளையும் தயாரிக்கிறோம். தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து உலகளவில் இந்தியா முன்னேற்ற பாதையில் உள்ளது.ரேஷன் கடைகளை புதுவையில் மூடிவிட்டதாக கூறினார்கள்.

இதனைகேட்க எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மத்திய அரசு புதுவைக்கு 25 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி வழங்கியுள்ளது. இதுதான் புதுவை ஏழைகளுக்கு கிடைத்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது இணையமைச்சராக இருந்த நாராயணசாமி ஜார்கண்ட் மாநிலத்திற்கு 5 ஆயிரம்கோடி கடனை தள்ளுபடி செய்தார். அப்போது புதுவையின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை.

மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். புதுவையின் நிலை விரைவில்மாறும். புதுவையில் பாஜக 23 இடங்களை கைப்பற்றும். பாஜக ஆட்சி அமைந்தவுடன், கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடங்கப்பபடும், உள்ளாட்சிதேர்தல நடத்தப்படும், புதிய ரெயில்பாதை அமைக்கப்படும். புதுவை காரைக்காலில் மேம்பாலம் அமைக்கப்படும் மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருவோம்.

சம்பளம் இன்றி தவிக்கும அரசு ஊழியர்களுக்கு நிலுவைதொகையுடன் முழுமையான சம்பளத்தை வழங்குவோம், ஆட்சிமாற்றம் வந்தபிறகு ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதனை புதுவை மக்கள் உணர்வார்கள், உங்கள் உற்சாகத்தை பார்க்கும்போது பாஜகவிற்கு 23 க்கும் மேற்பட்ட இடங்களை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உ ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உரை "யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது" "யோகாவினால் ...

ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்கால ...

ஜம்மு-காஷ்மீர்   சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, ...

தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமு ...

தனிநபர் ஆரோக்கியம் மற்றும் சமுதாயநல்லிணத்தை மேம்படுத்துவது யோகா 10-வது சர்வதேச யோகாதினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு ...

கிராம புறங்களில் பண பரிமாற்றத் ...

கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் ...

இந்திய திபெத் எல்லை காவல் படையி ...

இந்திய திபெத் எல்லை காவல் படையின் மீட்பு குழுவிற்கு அமித் ஷா பாராட்டு லாகூல், ஸ்பிட்டி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...