புதுச்சேரியில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும்

புதுச்சேரியில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 7 ) செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘உலகளவில் பொருளாதாரத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது.

நாடு இன்னும் வளர்ச்சிபெற வரிகள் ஏதுமில்லாத அனைத்துபிரிவுகளின் வளர்ச்சிக்கு தேவையான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல்செய்துள்ளார்.

நாட்டின் பலபொருளாதார நிபுணர்கள் விடுத்த சவால்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு மக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிகளைக்கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. குறிப்பாக, மக்களுக்கு நேரடியாகச்சென்று சேரும்வகையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைப்பதை செயல்படுத்தி வருகிறோம்.

ஆனால் இதனை நாராயணசாமி எதிர்க்கிறார். இதற்கான நிதியை மாநிலஅரசுக்கு வழங்க வேண்டுமென நாராயணசாமி கேட்கிறார். மத்திய அரசு இடைத்தரகர்கள் பயன்பெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை பலமாநில அரசுகள் ஏற்றுள்ளன. இது நாராயணசாமிக்கு பிடிக்கவில்லை.

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப் பட்டவில்லை. புதுச்சேரிக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை, ஜவுளிபூங்கா அமைப்பதற்கான அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் இருக்கிறது.

புதுச்சேரிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி செயல்படுத்திவருகிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அது மாநில வளர்ச்சிக்கான ஆட்சியாக இருக்கும். காங்கிரஸ்-திமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள். புதுச்சேரியில் இந்தமுறை நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும்’’இவ்வாறு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...