மத அடிப்படையில் பிரிக்க முயற்சி ; அருண் ஜேட்லி

உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக மக்களை மத அடிப்படையில் பிரிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்று பாஜக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாடியுள்ளார் .

இதர பிற்படுத்தப்பட்ட (ஒ.பி.சி.) வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27% இடங்களில், முஸ்லிம்களுக்காக 9% ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்து வருவதை கண்டித்துள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது சமூக அமைப்பில் ஆண்டாண்டு காலமாக ஜாதி அடிப்படையிலும் வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகத்தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

சமூகத்தில் அடுத்த நிலையில் பின் தங்கியிருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றத்தான் 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்ககூடாது என நாட்டின் அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 9% இட ஒதுக்கீடு தரப்படும் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது.

மத அடிப்படையில் இடங்களை ஒதுக்க முடியாது, நீதிமன்றம் அனுமதிக்காது என்று காங்கிரஸூக்குத் தெரியும்.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27% இடங்கள் குறைவு, இதில் மேலும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றமும் தடைப்படும் என்றும் காங்கிரஸூக்குத் தெரியும். இருந்தும் தன்னுடைய வாக்கு வங்கியைத் தாற்காலிகமாக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி தவறான வாக்குறுதியை அளிக்கிறது. மத அடிப்படையில் மக்களைப் பிரித்துவைத்து ஆட்சி செய்ய நினைக்கிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...