கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட ஆா்எஸ்எஸ் நிா்வாகியின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பாஜக செய்துதரும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறினாா்.
ஆலப்புழை மாவட்டம், சோ்த்தலை அருகே உள்ள நாகம்குளங்கரை பகுதியில் ஆா்எஸ்எஸ் நிா்வாகி நந்துகிருஷ்ணா(23) கடந்த புதன்கிழமை இரவு கொல்லப்பட்டாா். பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் கிளைஅமைப்பான எஸ்டிபிஐ நிா்வாகிகளால் இந்த இளைஞா் கொலைசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தசம்பவம் தொடா்பாக, எஸ்டிபிஐ அமைப்பைச்சோ்ந்த 8 பேரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, நந்துகிருஷ்ணாவின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று அவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கூறினாா். மத்திய இணை அமைச்சரும், கேரள பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரனும் உடன் சென்றிருந்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
நந்துகிருஷ்ணா படுகொலை வழக்கை, விசாரிப்பதில் மாநிலஅரசு அக்கறை காட்டவில்லை. இந்தச் சம்பவத்தில் இருந்து பாடம்கற்றாவது, மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த வழக்கை மாநில அரசு முறையாக விசாரித்து, நீதி கிடைக்கச்செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கத் துணிவில்லை என்றால், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ முறையாக விசாரணை நடத்தும். உயிரிழந்த நந்துகிருஷ்ணாவின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும் என்றாா் அவா்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |