தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
ஓசூரில் பாஜக சார்பில் ‘வெற்றிக்கொடியை ஏந்தி வெல்வோம் தமிழகம்’ என்ற தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியதாவது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரட்டைஇலக்க எண்ணிக்கையில் வெற்றிபெறும். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று அதிமுகமீண்டும் ஆட்சிக்குவரும். தமிழகத்தில் பொதுமக்கள் பாஜகவுக்கு அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது பாஜக பலம் கூடியுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லதிட்டங்கள், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் வழங்கும் முன்னுரிமை பிரதமரை தமிழ்நாட்டின் உண்மையான நண்பனாக மாற்றி உள்ளது.
இதுவே எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு அமைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |