எங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக… சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடி… Read more at: https://tamil.asianetnews.com/india/kerala-orthodox-syrian-church-urged

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட்பகுதியில் உள்ளது செயிண்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் சர்ச். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சர்ச் கி.பி.1050ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனிடையே தேவாலயம் உள்ள சாலையை தேசியநெடுஞ்சாலை ஆணையம் விரிவாக்கம் செய்துவந்தது. விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள தேவாலயத்தை இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அப்பகுதி மக்கள் பழங்கால தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேவலாயத்தை இடிக்கும் உத்தரவை தடைசெய்ய வேண்டுமென, கேரளாவை ஆளும் இடது சாரி கட்சிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் சர்ச் நிர்வாகம் கோரிக்கைவைத்தது. ஆனால் இந்த பிரச்சனையை அறிந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் ஆர்.பாலசங்கர், எவ்வித பிரச்சனையும் இன்று சுமூக உடன்பாட்டை பெற்றுத்தந்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்ரியை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை விவரமாக விளக்கிக்கூறியுள்ளார். இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர் தேவாலயத்தில் ஆய்வுமேற்கொண்டு, அது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சான்று கொடுத்தனர்.

எனவே 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை இடிக்கும்முடிவு கைவிடப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் தங்களை கைவிட்டநிலையில், களத்தில் இறங்கி கேட்காமலேயே உதவிய பாலசங்கருக்குதான் எங்களுடைய ஓட்டு என சர்ச் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து தேவாலய செய்திதொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் தெரிவித்திருப்பதாவது, “தேவாலயத்தில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவரோவியங்களும், 19ம் நூற்றாண்டில் தேவாலய தலைவராக இருந்த மலங்கரா மெட்ரோ பாலிட்டன் பிலிப்போஸ் மர் டயனிசியஸ் உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பழம்பெருமை வாய்ந்த இந்த தேவாலயத்தை காக்க யாரிடம் எல்லாமோ உதவிகோரினோம். ஆனால் பாஜக தலைவர் பாலசங்கர் எங்களுக்கு தானாகவே முன்வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். அவர் வரும்தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அறிந்தோம். அப்படி அவர் போட்டியிட்டால் அவருக்கு கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அப்படி செய்யா விட்டால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...