பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்?

பா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கிறார்கள்? 2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்முன்னர், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் இருந்தது. மதிய உணவு திட்டம். இதில் பொய்யான கணக்கு கொடுத்து கையாடல் செய்யப் பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யாமல் பொய்பெயர் பட்டியல் சேர்த்து கொள்ளை போடப்பட்டது. சமையல் எரிவாயு ஒரு வீட்டுக்கு 5 இணைப்புவரை பெற்று, அதிக விலையில் வெளியில் விற்கப்பட்டது.

NGO என்ற பெயரில், இந்தியாவில் இருக்கும் ஏழைமக்களுக்கு உதவுவதாக பணம் பெற்று, அதை மதமாற்று வியாபாரத்துக்கும் சுய லாபத்துக்கும் பயன் படுத்தப் பட்டது.இதைவிட பெரிய கொள்ளை என்ன என்றால், அரசியல் வாதிகள் பொது வாழ்வில் கொள்ளைபோடும் கறுப்பு பணத்தை, வெள்ளை பணம் ஆக்குவதற்கு, போலியாக நிறுவனங்கள் தொடங்கி, அவற்றில் லாபம்பெற்றதாக கணக்கு காட்டி வந்தார்கள். போலி ஆசிரியர்கள், போலி ரேசன் அட்டைகள், ஏராளம்.

வரிகட்டாமல் வியாபாரம். முன்பெல்லாம் தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டும் என்றால் பில் இல்லாமல் வாங்க இடிந்தது. அந்தமுறைகேடு எல்லா பொருள் விற்பனையிலும் இருந்துவந்தது. GST மூலம் அது ஒழித்து கட்டப்பட்டது. அதனால் வியாபாரிகளுக்கு கோபம்.

பாஸ்போட்டு , விசாஇல்லாமல் இந்தியாவுக்குள் வேலிதாண்டி வந்தவர்களை கண்டறியும் முயற்சியில் CAA கொண்டு வரப்பட்டது, காஷ்மீ்ர் தனி அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது, முத்தலாக் முறை முடிவுக்கு கொண்டுவந்தது இவை எல்லாம் இஸ்லாமியருக்கு பிடிக்கவில்லை.

இவை எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தை, பெண் உரிமையை, பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் ஆகும். இந்த முறைகேடுகளை ஒழித்து கட்டும் முயற்சியில் மோடி அரசு ஓரளவு வெற்றிகண்டுள்ளது.

அண்டை நாட்டு உதவியுடன் நடந்துவந்த தீவிரவாத செயல்கள் 99% வரை ஒடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு எல்லையில் ஆக்கிரமிப்புகள் முறியடிக்கப்பட்டது.
அதிவேக சாலைகள், அதிவேக ரயில்கள், நவீன துறை முகங்கள், உள்நாட்டு தயாரிப்புகள் (make in India), இலவச வீடுகள், சுத்தமான இந்தியா திட்டத்தில் எங்கும் கழிவறைகள், இலவச சமையல் எரிவாயு, விவசாய உதவி (6000)இவை மோடி அரசின் சிலகுறிப்பிட தக்க சாதனைகள்.இன்னும் செய்ய வேண்டியது ஏராளம்.

இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு விலைவாசி ஏற்றம் என்று மக்களை தூண்டி விடுகிறார்கள். சம்பளம் ஏறலாம் விலை ஏறகூடாது என்பது எந்த பொருளாதார மேதையின் கண்டுபிடிப்பு? கொத்தனார் கூலி ரூ 500 இருந்தபோது பெட்ரோல் விலை ரூ 70. இப்போ கொத்தனார் கூலி ஆயிரம். இரண்டுமடங்கு. பெட்ரோல் விலை 2 மடங்கு விற்க வில்லை. இது போல்தான் சமயல் எரி வாயு விலையும். அறிவு பூர்வமாக சிந்தித்து பார்த்தால் புரியும்.இந்தியா வளர்ச்சி பாதையில் தொடர்ந்துபயணிக்க வேண்டும் என்றால், ஊழல் கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...