காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது

காங்கிரஸ் கட்சி முகமது அலி ஜின்னாவின் பாதையைப் பின்பற்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தேசத்தை அழித்துவிடும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்தார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத்தேர்தல் வரும் 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்தத்தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றத் தீவிரமாக முயன்றுவருகிறது. அதேசமயம் இழந்த ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போராடிவருகிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் திப்ருகார்க் மாவட்டம், நாகர்காட்டியா நகரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் வழிகாட்டுதல்களை, பாதையை, கொள்கைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காங்கிரஸ்கட்சியும், ராகுல் காந்தியும் முகமது அலி ஜின்னாவின் வழிகாட்டுதல்களை, போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். ஜின்னாவின் கொள்கைகள் அசாமைமட்டுமல்ல இந்தியாவையும் அழித்துவிடும்.

காங்கிரஸ்கட்சி அசாம் மாநிலத்தில் ஏஐயுடிஎப் கட்சியுடனும், மேற்கு வங்கத்தில் ஐஎஸ்எப் கட்சியுடனும், கேரளாவில் ஐயுஎம்எல் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ராகுல்காந்தியின் பேச்சுகள் நாட்டை துண்டாடும்விதத்தில் இருக்கின்றன. அசாம் மாநிலத்தில் அரசியல் செய்துகொண்டு வடக்கு, தெற்கு என்று ராகுல்பேசுகிறார். பழங்குடியினருக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்குகிறார்.

காங்கிரஸ்கட்சி அசாம் மாநிலத்தை 55 ஆண்டுகள் ஆட்சிசெய்தது. ஆனால், என்ன உங்களுக்குக் கொடுத்தது. முகலாய மன்னர்களால் கூட அசாமைத் தோற்கடிக்க முடியவில்லை. இங்கு லச்சித் போர்புஹான் எனும் ஹீரோ இருந்ததால் அது நடக்கவில்லை. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மூலம்தான் ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலையின்மை போன்றவை உருவாகின.

ராகுல்காந்தி,பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ்கட்சி வரலாற்றுப் பாடத்தில் மட்டும் இடம்பிடிக்கும். எதையும் சாதிக்க முடியாது”.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...