மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன்

மக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவருவேன் “தி.மு.க-வும், காங்கிரஸும் திட்டமிட்டு உங்கள்மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். தூத்துக்குடியில் சரக்குப்பெட்டக மாற்று முனையம், துறைமுகத்திற்கு பிரதமர் மோடி மூவாயிரம் கோடி ரூபாயில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது இப்போ இங்கே இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன. ஏனென்றால் இது அரசியல். இந்ததேர்தலில் அவர்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும். பொய்சொல்லியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இதுபோன்ற புரளியை கிளப்பி விட்டு வருகின்றனர்.

துறைமுகம் மட்டுமல்ல நான்கு வழி சாலை கொண்டுவர கூடாது என்றார்கள். இரட்டை ரயில் பாதை கொண்டுவரக் கூடாது என்றார்கள். அங்கெல்லாம் யாருக்கும் எந்த பிரசனையும் கிடையாது. ஒவ்வொரு நலத்திட்டங்கள் வரும்போது பொய் பிரசாரங்களை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக கன்னியாகுமரி மாவட்டமே அழிந்து விடும் என்ற நிலைக்கு பிரசாரம் செய்து வைத்துள்ளனர்.

104 கோடி ரூபாயில் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை திட்டத்தை இல்லாமலாக ஆக்கிவிட்டனர். தென்னை ஆராய்ச்சி மையம் ஏறக்குறைய 10 ஏக்கர் நிலத்தில் கொண்டுவர இருந்தோம். அதையும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். இப்படி எல்லாம் திட்டத்தையும் இல்லாமல் ஆக்குவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திட்டமிட்டு வேலை பார்க்கின்றனர்.

யார் நாசமாகப் போனாலும் பரவாயில்லை. அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் இதுதான் அவர்கள் நோக்கம். எனவே மீனவ சகோதரர்கள் தைரியமாக நம்பி உங்கள் வாக்குகளை எங்களுக்குத்தாருங்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்பதை நான் உறுதி கூறிக்கொள்கிறேன்” கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...