IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது

அண்ணாமலை IPS அவர்கள் போட்ட போடு பலன்கொடுத்துள்ளது.”வாக்குகேட்டு யார் வேண்டுமானாலும் வரலாம் – அப்படி வருபவர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் – வோட்டு போடும்போது உங்கள் எண்ணத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துங்கள்”- என்று மாநில அளவிலான ஜமாத் மற்ற ஜமாத்களுக்கு வழிகாட்டியுள்ளது!

இதுதான் சரியான விஷயம்! ஆனால் இந்தசரியான விஷயத்தை – “ஆமாம்! எவரும் வாக்குக்கேட்டு எந்தப் பகுதிக்கும் வருவதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு – அப்படி வருபவர்களை – அவர்களது கருத்துக்களை நாம் ஏற்காவிட்டாலும்கூட கண்ணியமாக நடத்த வேண்டும்! நம்முடைய எண்ணம் எதுவோ அதை வோட்டு போடும்போது வெளிப்படுத்த வேண்டும்!”…

இந்த அடிப்படையான விஷயத்தை…எல்லாருக்கும் பட்டவர்த்தனமாகப் புரியக்கூடிய எளிய உண்மையை ஆணித்தரமாகச் சொல்வதற்கே…ஒரு அண்ணாமலை தேவைப்படுகிறார்!அதிலும் அவர் ஆணி அறைந்தாற்போல – “பள்ளப்பட்டி இந்தியத் திருநாட்டுக்குள்தான் இருக்கிறது – இந்தியன் CONSTITUTION கீழேதான் வருகிறது”- என்று ஓங்கி அழுத்தமாகச் சொன்ன பிறகுதான்…
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்து மாநில அளவிலான ஜமாத், உள்ளூர் “மூர்க்கவாதிகளை” (இது அண்ணாமலையின் வார்த்தை) திருத்த முன்வருகிறது!
ஆனால் இத்தனை அமர்க்களத்திலும் கருத்து சுதந்திரத்தை பற்றி வாய்கிழிய பேசுகின்ற…காங்கிரசும், திமுகவும், கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு, இடதுசாரி, லிபரல் அறிவுசீவிகளும்…

வாயில் வாழைப்பழத்தை கெட்டியாக அடக்கிக்கொண்டு மௌனம் காத்தனர்!
அது எப்படி ஒரு சுதந்திரமான நாட்டில், எந்த ஒரு மதக்குழுவும் “இன்னின்னார் எங்கள் பகுதிக்கு வோட்டு கேட்டு வரக்கூடாது?”- என்று ஃபத்வா போட முடியும்?
ஒரு வேளை மௌனமாக ரசிக்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்?
பள்ளப்பட்டி ஜமாத் – அண்ணாமலை குறிப்பிட்டது போல – திமுகவின் கிளையோ?
காங்கிரஸ்காரனுக்கு இதுபற்றி எல்லாம் கருத்தே இல்லையோ? ஐயா நான் ஒருவேட்பாளர் – எந்தக் கட்சியும் சாராத சுயேச்சை வேட்பாளராக – எந்தவித ஆள்பலமும், அமைப்பு பலமும் இல்லாதவராகவே இருக்கலாம்! ஆனால் நான்போட்டியிடும் தொகுதியின் எல்லாபகுதி மக்களையும் சென்று சந்தித்து வோட்டு கேட்கும் உரிமை எனக்கு இல்லையா என்ன?.

இதுபற்றி எல்லாம் – பள்ளப்பட்டி ஜமாத்தாரின் செயல்களுக்கு – எந்த எதிர்வினையும் ஆற்றாமல்…வாய்மூடி மௌனம்காக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் – கேரளாவில் முஸ்லீம் லீக் உங்களுக்கு எதிரான காங்கிரஸ் (UDF) கூட்டணியில் இருக்கிறது. அங்கே மலப்புரம்மாவட்டம் புழுவதும் கம்யூனிஸ்டுகள் உள்ளேயே வரக்கூடாது என்று அங்குள்ள – பள்ளப்பட்டியைப் போல நூறு மடங்கு வலு உள்ள ஜமாத்கள் – தடைபோட்டால் உங்கள் கதி? அங்கே உடனே கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிப்பு வியாதி வந்துவிடும்!

மதச்சார்பின்மை தினவு எடுக்க ஆரம்பித்துவிடும்! காங்கிரஸ் காரனுக்கு சிறுபான்மையினர் அரிப்புவியாதி வந்துவிடும்!, காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் – தேசியக்கட்சிகள் என்ற முறையில் பள்ளப்பட்டி ஜமாத்விட்ட அறிக்கையைக் கண்டித்திருக்க வேண்டும்!.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...