மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 2-ம் தேதி சோனார்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும்போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவரதுகாதில் இளைஞர் எதையோகூற, பிரதமர் மோடி இளைஞரின் தோளை அரவணைத்து உன்னிப்பாக கேட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. யார் அந்த இளைஞர், பிரதமர் மோடியிடம் அவர் என்னகூறினார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலித்தது.
புகைப்படம் தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி, எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தார். “அந்தஇளைஞர், முஸ்லிம் கிடையாது. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக நடத்தியநாடகம்” என்றார். இதனிடையே முன்னணி ஊடகங்களின் நிருபர்கள், விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடிகண்டுபிடித்தனர்.
அந்த இளைஞர் கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியைசேர்ந்த ஜுல்பிகர் அலி (38) என்பது தெரியவந்தது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏப்ரல் 2-ம் தேதி சோனார்பூரில் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 40 விநாடிகள் மட்டுமே பிரதமருடன் பேசினேன். இது 40 ஆண்டுகள்வரை என் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருக்கும்.
எனதுபெயரை பிரதமர் கேட்டறிந்தார். எனக்கு ஏதாவதுவேண்டுமா என்று அன்போடு கேட்டார். எனக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம், கவுன்சிலர் சீட்கூட வேண்டாம். உங்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ள வேண்டும். அதுதான் எனது பேராசை என்று கூறினேன். அவர் உடனடியாக புகைப்பட நிபுணரை அழைத்து புகைப்படம் எடுக்க செய்தார்.
நான் முஸ்லிம். கடந்த 2014-ம்ஆண்டு முதல் பாஜகவில் உள்ளேன். தற்போது தெற்குகொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பதவிவகிக்கிறேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினேன். அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |