மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துகொண்டது.
தேர்தலுக்கு பிறகு பாஜக.வினரை குறி வைத்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையால் சுமார் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருகின்றனர்
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுநர் ஜெகதீப்தன்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். கூச்பெஹார் பகுதி, தின்ஹட்டாவுக்கு ஆளுநர் சென்றபோது போலீஸாரும் திரிணமூல் காங்கிரஸாரும் அவரை தடுத்துநிறுத்தினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் கூறும்போது, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. வீடுகள்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மக்களை போலீஸாரே மிரட்டுகின்றனர். என்னை துப்பாக்கியால் சுட்டாலும் மார்பில் குண்டைதாங்குவேன். ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. முதல்வர் மம்தாவின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை” என்று தெரிவித்தார். முதல்வர் மம்தாபானர்ஜி தோல்வி அடைந்த நந்திகிராம் தொகுதி வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் பகுதிக்கு ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |