வாழ்த்துவோம் வரவேற்போம் வெல்கம் அண்ணாமலை ஜி

தமிழக பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வருகை தொண்டர்களிடையே குறிப்பாக இளைஞர் மத்தியில் ஒரு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான கட்சி. இங்கே குடும்ப அரசியல் கிடையாது, நேர்மை, உழைப்பு அர்ப்பணிப்புகளுக்கு மட்டுமே இங்கே முன் னுரிமை.

அண்ணாமலையின்  பாதை நேர்மையின் பாதை அவர் உயர் அதிகாரியாக வரவேண்டும், அதன்மூலம் மக்களுக்கு சேவை புரிய வேண்டும்z என்ற சிறுவயது இலக்குடனேயே இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். கர்நாடகாவில்  தனது பணியை  தொடங்கினார் , அதை ஒரு மக்கள் பணியாகவே  கருதி செயல்படவும் செய்தார். அதற்கு கிடைத்த சான்றுகள் தான் கர்நாடகாவின் சிங்கம் என்று அன்புடன் அம்மாக்களால் அலைக்கப்பட்டது. உயர் அதிகாரியாக இருந்த போதிலும் பணிவும் பண்பும் மக்களுக்கு நன்மை செய்துவிட வேண்டும் என்ற எண்ணங்களும் அவரை அனைத்து தரப்பும் கொண்டாடும் நபராகியது.

பொதுவாக ஐஏஎஸ், ஐ பி எஸ் போன்ற இந்திய ஆட்சியர் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும், தேர்வுக்கு தயாராவோற்களும் பெரும்பாலும் மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடனேயே மிகவும் கடினமாக உழைத்து வெற்றி பெறுகின்றனர். தாங்கள் ஊழல் செய்ய வேண்டும், அதிகப்பணம் சம்பாதிக்க வேண்டும், சொகுசாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் எழுதுபவர்கள் மிகச் சிலராகவே இருப்பர். அப்படி உழைத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று வருபவர்களில் கிட்டத்தட்ட 90% பேர் தங்கள் இலக்கை காலப்போக்கில் பெரும்பாலும் துளைத்து விடுகின்றனர், தேடிப் பார்த் தால் எங்கே தொலைத்தோம் என்று அவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு விடுகின்றனர். காரணம் சமூக சூழல் அரசியல் நெருக்கடிகள் அதையும் கடந்து செயல்பட்டாலும் மக்களுக்கு தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பலதடைகள்  இதில் ஏதோ ஒன்று அண்ணாமலை க்கும் நடந்திருக்கலாம். தன்னை முழுமையான மக்கள் சேவையில் ஈடுபடுத்திக்கொள்ள இந்த ஐபிஎஸ் என்ற உயர் பதவியும் தடையே என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக கூட அவர் தன் பணியை துறந்து இருக்கலாம்

உண்மையும் அதுவே. அரசியலை விட  மக்கள் சேவையில் பல அற்புதங்களை செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. அரசியல்வாதியாக டாக்டர் அம்பேத்கார் தன் சமூகத்துக்கு சமூக நீதியை பெற்றுத் தந்தார் அனைத்து சமூகத்துக்கும் பொதுவானவராக பல செயற்கரிய காரியங்களை செய்யவும் செய்தார், சிறந்த கல்வியாளராக மிக இளம் வயதிலேயே 33 வயதில் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி தொடங்கிய ஜனசங்கம் தான் இன்று பாரதிய ஜனதா வாக நாட்டை ஆளுகிறது.
அவருக்கு உதவியாக வந்த மற்றொரு மிகப்பெரும் கல்வியாளரும் அறிவு ஜீவிவியுமான தீனதயாள் உபாத்தியாயாவின் “அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும்” “எளியவனுக்கும் வலியவனுக்கும் சலுகைகள் சென்று சேரவேண்டும்” என்ற கொள்கைகள் தான் இன்று பாரதிய ஜனதாவை வழிநடத்துகிறது. உயர்ந்த எண்ணங்கள் கொண்ட அறிவுஜீவிகள் வரலாறு படைப்பார்கள் என்பதற்கு இவர்கள் சான்று.

மக்கள் சேவைக்காக பதவி, பணம், பல சலுகைகளை உதறி விட்டு வந்த அண்ணாமலையும் படைக்கட்டும் ஒரு வரலாறு என்று வாழ்த்துவோம், வரவேற்போம் வெல்கம் அண்ணாமலை ஜீ

நன்றி தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...