கரோனா மனிதநேயம் தொடர்பானது

கரோனா பெருந்தொற்று அரசியல் பிரச்சினைஅல்ல, மனிதநேயம் தொடர்பான பிரச்சினை என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்றுகாலை டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சு விவரங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினையல்ல. ஆனால், நமக்கும் இந்த அரசுக்கும் மனித நேயம் தொடர்பான பிரச்சினை. 100 ஆண்டுகளுக்குப்பின் இந்த பூமியில் இதுபோன்ற பெருந்தொற்று உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குமுன் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். ஆனால், முதல்முறையாக, மிகப்பெரிய அளவிலான மக்கள்ரேஷன் பொருட்களைப் பெருந்தொற்று காலத்தில் பெற்றார்கள், ஒருவர்கூட பட்டினியுடன் தூங்கவில்லை. நமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளோம். தடுப்பூசியாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கான நலத்திட்டங்களாக இருந்தாலும்சரி, அவை மக்களுக்கு கிடைப்பதை எம்.பி.க்கள் உறுதிசெய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக 2 அல்லது3 மாநிலங்களில் சுருங்கிவிட்ட கட்சி(காங்கிரஸ்) நடந்துகொள்ளும் முறை வேதனையளிக்கிறது. அதிகாரம் தங்களின் உரிமை, எனநினைத்து காங்கிரஸ்கட்சி தனது விருப்பம்போல் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சுமூகமாக நடக்கவிரும்புகிறோம். ஆனால் அவையை நடத்தவிடாமல் அமளிசெய்து, காங்கிரஸ் கட்சி மிகுந்த பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.

நாட்டு மக்களைப்பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை.மக்கள் பாஜகவை 2-வது முறையாக ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்ததை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. பாஜக எம்.பி.க்கள்மத்திய அரசின் உண்மையான செயல்பாடுகளை மக்களின் முன்எடுத்துச் சென்று, எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிப்படுத்த வேண்டும். கரோனா 3-வது அலை வரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. நிலைமைகளை சந்தித்து பணியாற்ற எம்.பி.க்கள் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவையில் நேற்று மாலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு பதிலளித்து பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலைதடுப்பதில் மாநில முதல்வர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பாராட்டு தெரிவித்து வருகிறார். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் வெற்றி பெறும்போது, மாநில முதல்வர்கள் வெற்றியை சொந்தம் கொண்டாடு கின்றனர். தோல்வி ஏற்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுகின்றனர். கரோனா விவகாரத்தை அரசியலாக்கவேண்டாம்.

சில மாநிலங்கள் தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன. ஆனால் எந்தமாநில அரசு மீதும் நாங்கள் குற்றம்சாட்ட விரும்பவில்லை. நாட்டின் 130 கோடி மக்களும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல் பட்டால் கரோனா 3-வது அலையைதடுக்க முடியும். பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...