-”தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்ட சபை தேர்தலில், 150 தொகுதிகளில் தாமரையை மலரவைப்பது தான், அடுத்த இலக்கு,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழகத்தில் இருந்து தேர்வாகி பணியாற்றிவரும், மத்திய அரசு வாரிய இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரை யாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், வாரியதலைவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள், அரசு வழக்கறிஞர்கள் என, 333 பேர் பங்கேற்றனர்.
அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தில் தாமரைமலராது என, விமர்சிக்கப்பட்ட நிலையில், முருகன் முயற்சியால், நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. வரும் 2026 சட்ட சபை தேர்தலில் 150 தொகுதிகளில் தாமரை மலரவேண்டும் என்பதுதான், பா.ஜ., வின் அடுத்த இலக்கு.மத்திய அரசின் வாரியபதவிகளை சுமையாக கருதக்கூடாது; இனிய அனுபவமாக கருதி பணியாற்ற வேண்டும். துறை சார்ந்த புத்தகங்களை படித்து, துறை வளர்ச்சிக்கு உத்வேகத்துடன் செயல்படவேண்டும்.
வாரிய பதவிகள் வாயிலாக, பொதுமக்கள் பயன் அடையவேண்டும். கட்சியினர் உற்சாகம் பெற வேண்டும். கட்சிவளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு வழிகாட்டவேண்டும்.பிரதமர் மோடியை போல, நாம் நுண்ணறிவுடன் பணியாற்றி, கட்சிக்கு பெருமைசேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |