உங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வு?

ஒரு காலத்தில் இந்தியாவின் அங்கமாக இருந்த கிழக்கு வங்கம்தான் இன்றைய பங்களாதேஷ்.1905இல் வங்கத்தை அன்றைய பிரிட்டீஷ் வைஸ்ராய் கச்சான் பிரபு மதரீதியாக கிழக்குவங்கம் – மேற்கு வங்கம் என இரண்டாகப் பிரித்த போது அதை எதிர்த்து இந்து, முஸ்லிம் ஆகிய இருமதத்தினரும் ஒன்றுபட்டுப் போராடினர்.

ஆனால் முஸ்லிம்லீக் கட்சியின் உருவாக்கம் (1906) ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தை பிளவுபடுத்தி, இஸ்லாமியருக்கு தனி நாடு கோரும் அளவுக்குச் சென்றது 1930களில். 1946இல் முகமது அலி ஜின்னா அறிவித்த நேரடி நடவடிக்கை அறிவிப்பை அடுத்து, கிழக்குவங்கத்தின் நவகாளியில் நிகழ்ந்த மாபெரும் இனப் படுகொலை, மனிதகுல வரலாற்றின் நீங்காதசாபம். அதில் பல லட்சம் இந்துக்கள் கொடூரமாக பாதிக்கப் பட்டனர்; சுமார் 5000 இந்துக்கள் படுகொலை செய்யப் பட்டனர். தேசப் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி சம்மதிக்க இந்தகொடிய வன்முறையே காரணமாக அமைந்தது.

அதன் பிறகு கிழக்குவங்கம் ‘கிழக்கு பாகிஸ்தான்’ ஆனது. மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் ‘மேற்கு பாகிஸ்தான்’ ஆகின. இவ்விரு பகுதிகளும்சேர்ந்து பாகிஸ்தான் நாடாக 1947இல் உருவானது.
அதன்பிறகு கிழக்கு பாகிஸ்தான் மீது மேற்கு பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல்கள், (வங்க மொழி- உருது மொழி வேறுபாடு அதற்கு முக்கிய காரணம்), பாகிஸ்தான் அரசின் பாரபட்சம் காரணமாக கிழக்குவங்கத்தில் தனிநாடு கோரிக்கை எழுந்தது. அதை அரக்கத்தனமாக பாகிஸ்தான் அரசும் ராணுவமும் அடக்கின.

வங்கமொழி பேசும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் பாக். ராணுவத்தாலும், முஸ்லிம் லீக் கட்சியினராலும் குறிவைத்து தாக்கப்பட்டனர். பாக். ஆதரவு அமைப்பான ஜமாத் ஏ இஸ்லாமி குழுவினரால் சுமார் 3 லட்சம் கிழக்குவங்க மக்கள் அப்போது கொல்லப்பட்டனர். எனவே கிழக்கு வங்க போராளிகள் இந்தியாவின் உதவியை நாடினர். பலலட்சம் மக்கள் எல்லை தாண்டி இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்கு அகதிகளாக வந்தனர்.

1971இல் நடைபெற்ற இந்திய – பாக். போருக்கு அதுவே காரணமானது. அந்தப் போரில் இந்தியா பெற்ற மாபெரும்வெற்றியே ‘பங்களாதேஷ்’ என்ற புதிய நாடாக கிழக்கு பாகிஸ்தான் மாறியதன் அடிப்படை. கிழக்கு வங்க போராளி தலைவரும் அவாமிலீக் கட்சித் தலைவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் புதிய பங்களாதேஷின் பிரதமர் ஆனார்.

ஆனால் பங்களாதேஷில் மதவெறி மாறவில்லை. நாட்டின் முதல் பிரதமர் 1975இல் கொல்லப்பட்டார். அதன்பிறகு பங்களாதேஷில் மீண்டும் மதவெறி கோலோச்ச துவங்கியது. அதுவும் மற்றொரு பாகிஸ்தான் ஆகிவிட்டது.
1992இல் இந்தியாவின் அயோத்தியில் பாபர்மசூதி தகர்க்கப்பட்டபோது பங்களாதேஷ் வன்முறைக் களமானது. (பாகிஸ்தானில்கூட அந்த அளவுக்கு வன்முறை அப்போது நிகழவில்லை). அப்போது பல்லாயிரம் இந்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்; ஆயிர கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அந்தவன்முறை, இஸ்லாமிய மதவெறிக் கும்பலை அரசே பின்னணியில் இருந்து இயக்கிய கலவரம் ஆகும். இதை மையப்படுத்தி வங்க எழுத்தாளர் தஸ்லிமா நஸுரீன் எழுதிய புதினம்தான் ‘லஜ்ஜா’. அதற்காக அவருக்கு எதிராக மதவெறியாளர்கள் மரண அறிவிப்பு (ஃபத்வா) வெளியிட்டனர். தற்போது அவர் இந்தியாவில் அடைக்கலமாகி, தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

பங்களாதேஷ் நாட்டின் மொத்தமக்கள் தொகை சுமார் 17 கோடி. இதில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள்; சுமார் 1.5 கோடி மக்கள் இந்துக்கள். இவர்கள் தினந்தோறும் அடைந்துவரும் வேதனைகளுக்கு அளவில்லை. இந்து ஒருவர் வாழ்வில் முன்னேறிவிட்டால் அவரது குடும்பமே அழிக்கப்பட்டு விடும். அவரது சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடும். இந்துப் பெண்களின் நிலையை விவரிக்கவே முடியாது.

எனவே அவர்கள் பாதுகாப்புத்தேடி அண்டையில் உள்ள இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு அடைக்கலம் நாடி அகதிகளாக வருகின்றனர். இந்திய அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச்சட்டத்தின் (CAA) அவசியம் இப்போது புரிந்திருக்கும்.

பங்களாதேஷ் மிகவும் ஏழைநாடு. எனவே பிழைப்புக்காக அங்கிருந்து ஏழை இஸ்லாமியர்களும் இந்தியா வருகின்றனர். இவர்கள் அகதிகள் அல்ல. ஆனால் வங்கமொழி தாய்மொழியாக இருப்பதால் எளிதாக இந்தியா முழுவதும் பரவி உள்ளனர். அது தனிக்கதை.

பங்களாதேஷ் நாட்டை ஆளும் அவாமிலீக் கட்சிக்குப் போட்டியாக உள்ள பாக். ஆதரவு இஸ்லாமிய அமைப்புகள், அங்குள்ள இஸ்லாமிய மக்களின் ஆதரவைப்பெற அடிக்கடி மதக்கலவரத்தைத் தூண்டுவது வழக்கம். தற்போது அந்நாட்டை ஆள்பவர், பங்களாதேஷின் தந்தை ஷேக்முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா. இவர் இந்திய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.

எனவே பங்களாதேஷ் பிரதமர் ஷேக்ஹசீனா வுக்கு அரசியல் ரீதியாக தொல்லை கொடுக்க விரும்புவோரின் எளிய உத்தியாக மதக்கலவரம் உள்ளது. இஸ்லாமிய நம்பிக்கைகளை இந்துக்கள் அவமதித்து விட்டதாக வதந்தியைக் கிளப்பிவிட்டால் போதும். தாக்குவதற்கு எளியஇலக்கான, திருப்பி பதிலடி கொடுக்காத இந்துக்கள் நடுத்தெருவில் பெரும் கும்பல்களால் வேட்டையாடப்படுவர்.

இப்போது கடந்த ஒருவாரமாக பங்களாதேஷ் நாட்டில் நடந்து வருவது இதுவே. உண்மையில் இது இரு தரப்பினர் இடையிலான மதக் கலவரம் அல்ல. இந்துக்கள் பதிலடிகொடுக்கும் நிலையிலும் அங்கு இல்லை. அங்கு தற்போது நடப்பது பட்டவர்த்தனமான இன அழிப்பு; பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களே இல்லாமல் செய்து, முழுமையான முஸ்லிம் நாடாக்கும் முயற்சி.
ஷேக் ஹசீனா அரசால் இதைத்தடுக்க முடியாது. தடுத்தால், அரசு கடும் நடவடிக்கை எடுத்தால், அவரது தந்தைக்கு நேரிட்டதே அவருக்கும் நடக்கும்.

என்னவாகப் போகிறார்கள் பங்களாதேஷ் இந்துக்கள்? நெஞ்சம்கலங்குகிறது.
இந்திய அரசு ஒன்றே அவர்களுக்கு துணை. ஆனால் இன்னொரு நாட்டில் ஒருஎல்லைக்கு உட்பட்டே இந்தியாவால் செயல்பட முடியும். தவிர இந்தியத் தலையீடு ஷேக் ஹசீனாவுக்கு எதிரானோருக்கு- இந்தக்கலவரத்தை நடத்துவோருக்கு மிகவும் லாபமாகிவிடும். அதையே பங்களாதேஷ் மதவெறிக் கும்பல்கள் எதிர்பார்க்கின்றன. ஆயினும் இந்தியஅரசு சார்பில் அந்நாட்டு அரசு தொடர்பு கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்.

இந்தியாவில் எப்போதாவது நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளின்போது கொதித்துக் கொந்தளிக்கும் இந்திய அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இப்போது ஏன்மௌனமாக இருக்கிறார்கள்? பங்களாதேஷில் தொடர்ந்து நடைபெறும் இனப் படுகொலையை உலக நாடுகளும் ஐ.நா.சபையும் ஏன் வேடிக்கை பார்க்கின்றன? இந்திய இஸ்லாமிய சமூகம் ஏன் இதைக் கண்டிக்கத் தவறுகிறது?

ஒரே பதில்தான். உணர்வுள்ள சமுதாயம் வாழும்; மற்றது வீழும். நாம் என்ன செய்யப் போகிறோம்? 1910களில் எங்கோ இருக்கும் தொலைதூரத் தீவான ஃபிஜியில் இந்து ஸ்திரீகள் கொடுமைப்படுத்தப்பட்ட போது, மன வேதனையில் மகாகவி பாரதி எழுதிய ‘கரும்புத் தோட்டத்திலே’ கவிதை, அவரது மானுடத்தன்மையின் சிகரம். இங்கு உள்ளவர்கள் எப்படி?
பங்களாதேஷில் இந்துக்கள் நவராத்திரியை ஒட்டி நரவேட்டையாடப்படுகிறார்கள். இவர்களைக் காக்கப்போகும் துர்க்கை யாரோ?

நன்றி வாமு முரளி 

One response to “உங்களுக்கு இருக்கிறதா பாரதியின் உணர்வு?”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...