நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப் பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி சுகாதாரத் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 9 மாதங்களில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 100 கோடியை கடந்துசாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டுதவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா்.
நாட்டில், மக்கள் தொகையின் அடிப்படையில் உத்தரகண்டில் அதிகபட்சமாக முதல்தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தசாதனையைக் கொண்டாடும் பொருட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுகாதாரத்துறையினர் கலந்துகொள்ளும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘இந்தியாவின் வரலாற்றுநாள் இன்று. 130 கோடி இந்தியர்களின் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டுமுயற்சியின் வெற்றியை இன்று காண்கிறோம்.
100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நாடு, இந்தசாதனையை அடைய உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |