மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன

நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த  ஜனவரி 2021 வாக்கில், மத்திய அரசின் நிதி உதவியுடன் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான பயனாளிகளை கண்டறிந்து பதிவு செய்யும் முகாம் நடை பெற்றது. இதை பாஜக சமூக ஊடக மாநில பொறுப்பாளரும், சக்சம் அமைப்பின் மாநில ஆலோசகருமான தமிழ்தாமரை வெங்கடேஷ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இனைந்து  20 க்கும் அதிகமான ஒன்றியங்களில் ஏற்பாடுகளை கவனித்தார்.

இதனை தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கு நேற்று தஞ்சாவூரில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைசார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசாமி, மத்திய மீன் வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில், 1,705 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பிலான, 3,770 உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமி பேசியது:நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்குவந்த பிறகு நாடுமுழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10,933 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.1,268.44 கோடிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 20.74 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 410 முகாம்கள் நடத்தப்பட்டு, ரூ.42.84 கோடியில் 92 ஆயிரம்பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை தமிழகத்தில் இதுவரை 3.93 லட்சம் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 8,576 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.23.60 கோடிக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீனதயாள் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 7,266 பேர் பயன்பெறுகின்றனர். இதற்காக மத்திய அரசு ரூ.12.90 கோடி வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மூலம் பல்வேறு திறன்மேம்பாட்டு பயற்சிகள் அளிக்கப்படுகிறது. பயற்சி பெறும் அனைவரும், பெரிய தடைகளை தாண்டி, விடாமுயற்சியால் சூப்பர் ஹீரோவாகிறார்கள். அவர்கள் பாரா ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதேபோல, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும். அவர்களுக்காக உதவி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான வழிவகை செய்யும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரி ...

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரின் செய்தி மதிப்பிற்குரிய பிரமுகர்களே,விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...