ஈரானில் போர் பதற்றம்

ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம்

வழியாக செல்ல ஈரான் மறைமுக தடைவிதித்தது. இங்கு அடிக்கடி கடலில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக அதிநவீன அணு தொழில் நுட்பத்தை ஈரான் அறிவித்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த் தியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. எனவே, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த போர்க்கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளன. இது ஸ்ரெய்ட்ஸ் ஆப்ஹோர்ம்ஸ் துறைமுகத்தில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில்தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. அமெரிக் காவும், ஈரானுக்கும் போருக்கு தயாராக உள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...