மத்திய பிரதேசத்தில் ‘ஸ்வமித்வா’ திட்டத்தின்கீழ், லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, ‘இசொத்து’ அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோகான்பரன்ஸ்’ வழியாக நேற்று வழங்கினார்.
மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளதுபோல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன்பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன் படுத்தவும் இந்தத்திட்டம் வழிவகுக்கிறது.’ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டிவிமானம் வாயிலாக, கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு, மறுவரையறை செய்வதையும், இதுநோக்கமாகக் கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இத்திட்டம் ஊக்கப் படுத்துகிறது.
இந்நிலையில், முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சிநடக்கும் மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, இசொத்து அட்டைகளை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நேற்றுவழங்கினார்.அப்போது பயனாளியருடன் பிரதமர் மோடி பேசியதாவது:கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒருவரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது.
இத்திட்டத்தின் வாயிலாக நாடுமுழுதும் அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இதுவெறும் சொத்து ஆவணம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், கிராம மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் திட்டமாகவும் உள்ளது. நாட்டில் ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த பலகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள், தொலைதுார பகுதிகளில்வசிப்பவர்கள் பெரும்பலன் அடைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில் ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |