மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன என அனைவரும் அறிவார்கள் . முன்னர்நான் கூறியது போல மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய ஆலயங்களை அவர்நிறுவி அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாம் . அவர்காலத்தில் தோன்றிய மற்றொரு ஆலயம் ஹர்சித்தி மாதா ஆலயம் . இந்த ஆலயம் 1 3 அல்லது 14 ஆம் ஆண்டை சார்ந்தது
என்ற கருத்து உள்ளது. ஹர்சித்தி என்றால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி என்ற பொருள் உண்டு. ஒரு விசித்திரம் என்ன எனில் பார்வதியின் உடல் விழுந்த இடத்தில் எழும்பிய ஆலயத்தின் தேவி வைஷ்ணவ சக்தி தேவியாக கூறப்படுகின்றாள் . கீழே காளி , அதற்கு மேல் அன்னபூ ர்ணியாக உள்ள மஹாலஷ்மி மற்றும் அதற்கு மேல் மஹா சரஸ்வதி என்ற மூன்று தேவிகளை அங்கு வைத்து மந்திர சக்திகள் ஏற்றி ஸ்தாபிக்கப்பட்டு உள்ளனவாம். அந்த மஹாலஷ்மியே ஹரிசித்தி மாதாவாக உள்ளதால் அது வைஷ்ணவ கடவுளாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் .
1447 ஆம் ஆண்டு மராதா மன்னர்கள் ஆலய நுழை வாயிலில் 1008 எண்ணை விளக்குகள் ஏற்றும் விதத்தில் இரு தூண்களை அமைத்து உள்ளனர். ஆந்த தீபஸ்தம்பத்தில் உள்ள கல்வெட்டு இந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
ஹர்சித்தி மாதா பற்றி இரண்டு கதைகள் உள்ளன. முதலாவது கதையின்படி தட்ச யாகத்தில் சிதையில் விழுந்து உயி ர் விட்ட பார்வதியின் உடலை தன் தோள் மீது வைத்துக் கொண்டு ஆவேசமாக நடனம் செய்து கொண்டு இருந்த பொழுது அதை நிறுத்த திருமால் தன்னுடைய சக்ராயுதத்தினால் அவள் உடலைத் துண்டாக்கினர் . அவள் உடல் சிவபெருமான் நடனம் ஆடியவண்ணம் சென்று கொண்டு இருந்த பொழுது பல இடங்களில் விழ, அவை விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி ஆலயங்கள் எழுந்தன. அப்படியாக அவளுடய இடுப்புப் பகுதி விழுந்த இடமே ஹர்சித்தி ஆலயமாயிற்றாம் .
ஸ்கந்த புராணக் கதைப்படி சாந்த் மற்றும் பிரசான்த் என்ற இரண்டு அசுரர்கள் பூமியிலும் தேவலோகத்திலும் பீதியை உண்டுபண்ணும் விதத்தில் அட்டகாசம் செய்து வந்தனர் . அப்படி அட்டகாசம் செய்து கொண்டு சென்றவர்கள் கைலாயத்தில் சிவனும் பார்வதியும் தாயக்கட்டை விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை அடைந்தனர் . அவர்களைத் தடுத்த நந்திதேவரையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினர் . அவர்கள் பெற்றிருந்த அழியா வரத்தினால் அவர்களை எந்த ஒரு தனி பிறவியும் மரணம் அடையச் செய்ய முடியாது . அதனால் அவர்களை அடக்க முடியாமல் போன சிவபெருமான் சக்தியை வேண்டினார் .
அவளும் கேட்டதை அருளும் விஷ்ணுவின் சக்தியான அன்னபூர்ணி மற்றும் சிவனின் கணமான காளியின் சக்தி என்ற இரண்டையும் உள்ளடக்கிக் கொண்டு, உடனே அங்கு வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்தாள் . அதனால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமான் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்றுத் தருபவள் எனும் விதமாக ஹர்சித்தி தேவி என அவள் அழைக்கப்படுவாள் என ஆசிர்வதித்தார். அப்படியாக அவள் அந்த அசுரர்களை தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தில் வந்து அழித்ததினால்தான் அந்த இடத்திலேயே ஹரிசித்தி ஆலயம் அமைந்தது.
அந்த ஆலயத்தின் கற்பக்கிரகத்திற்குள் நுழையும் முன் உள்ள மண்டபத்தின் மேற் கூரையில் ஐம்பது மந்திர தேவதைகளும் ஸ்ரீ சக்கர யந்திரமும் பொறிக்கப்பட்டு உள்ளன. அதனால்தான் அந்த ஆலயத்தில் நுழைந்த பின் அந்த இடத்தில் நின்று கொண்டு தேவியை பிரார்திக்கும் பொழுதே அனைத்துப் பாபங்களும் விலகி விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஹர்சித்தி மாதா சன்னதியை சுற்றி மேலும் பல தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு சன்னதியில் ஒரு கோடி நாகமந்திரப் பிரதிட்சை செய்யப்பட்ட நாகதேவ் என்ற லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. ஆகவே அந்த சன்னதியில் நாக தோஷம் விலக் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் கூறுகின்றனா
நன்றி சாந்திப்பிரியா
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.