உண்மைகளை வரவழிக்கும் வினாயகர்

ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூரில் இருந்து பதினோரு கி.மீ தொலைவில் உள்ளது காணிப்பாக்கம் . பஹ_டா என்ற நதிக் கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளி உள்ள வினாயகர் உண்மைகளை வரவழிக்கும் வினாயகர் என்ற பெருமை கொண்டவர் . அந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் தீராத கஷ்டங்கள் தீரும் ,

வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை பலமாக உள்ளது. பதினோறாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் எழப்பப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலயம் விஜயசகர மன்னர்களினால் மேலும் சீரமைக்கப்பட்டதாம் .

ஆலயம் எழுந்த கதை

அந்த ஆலயம் எழுந்த வரலாறு சுவையானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஆலயம் உள்ள ஊரில் மூன்று விவசாயிகள் இருந்தனர் . விசித்திரம் என்ன எனில் அந்த மூவரும் ஒவ்ஒரு விதத்தில் அங்ககீனமானவர்கள் . ஒருவர் செவிடர் , இன்னொருவர் ஊமை, மூன்றாமவர் குருடன் . ஆனாலும் அந்த மூவரும் சேர்ந்து ஒரு நிலத்தை உழுது பயிரிட்டு சம்பாத்தியம் செய்தனர் . அவர்கள் அந்த வயலுக்கு அருகில் இருந்த கிணற்றில் இருந்துதான் நீர் இறைப்பது பழக்கம் .

இப்படியாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் ஒரு நாள் அற்புதம் நிகழ்ந்தது. கிணற்றில் இருந்த நீர் முழுமையாக வற்றி விட அதனுள் உள்ள ஊற்றில் அடைப்பு ஏதும் இருக்கின்றதா எனப் பார்க்க அவர்களில் ஒருவன் கிணற்றில் இறங்கி அதைத் தோண்டினான் . என்ன வினோதம் , அவன் மண்வெட்டி எதோ ஒரு கல் மீது மோத அதில் இருந்து இரத்த சிவப்பு நிறத்தில் நீர் ஊறத் துவங்கியது. சற்று நேரத்தில் கிணற்றின் மண் பகுதி முழுவதும் சிவப்பாகி விட்டது. பயந்து போன மூவரும் அந்த ஊர் ஜனங்களை அழைத்து வந்து அதைக் காட்டினர் . அவர்களும் அங்கு வந்து அந்த அதிசயத்தைக் கண்ட பின் எங்கிருந்து இரத்த சிவப்பு நீர் வெளி வருகின்றது என அந்த கிணற்றில் இறங்கிப் பார்க்க அதில் முழுகி இருந்த வினாயகர் சிலை வெளியில் வந்தது.

அனைவரும் குதூகுலித்து அதை வெளியில் எடுத்து தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்து பூஜித்தனர் . அந்த தேங்காய்களை உடைத்த பொழுது அதில் இருந்து வெளியான இளநீர் சுமார் இருபது குழி தூ ர அளவுக்கு விழந்தது. அதனால் இருபது குழி அளவைக் கூறும் வார்தையான காணியையும் , பாக்கம் என்றால் பாய்ந்து செல்லுதல் என்பதை கூறும் இரண்டாவது வார்த்தையையும் சேர்த்து அந்த இடத்திற்கு காணிப்பாக்கம் எனப் பெயரிட்டனராம் . இன்னொமொரு அதிசயமும் நிகழ்ந்தது. அந்த சிலையை வெளியே எடுத்தவுடன் குருடனுக்கு கண் பார்வை கிடைத்தது, செவிடனுக்கு காது கேட்கத் துவங்கியது, ஊமை பேசத் துவங்கினான்.

ஆலய நதியின் வரலாறு

அந்த ஆலயத்தின் பக்கத்தில் ஓடும் நதி பஹ_டா பற்றியும் வியப்பான ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் அந்த ஆலயம் இருந்த பகுதிக்கு இரண்டு சகோதரர்கள் தீர்த்த யாத்திரைக்கு வந்தனர் . வந்தவர்கள் இருவரும் மிகவும் பவித்திரமானவர்கள் , நோமையானவர்கள் . அங்கு வந்து சேர்ந்து ஒரு வயல் பகுதியில் தங்கினர் . சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. இளைய சகோதரருக்கு ஒரே பசி . ஆகவே அருகில் இருந்த வயலில் இருந்த மாங்காய் மரத்தில் இருந்து அதன் சொந்தக்காரனைக் கேட்காமல் ஒரு பழத்தைப் பறித்துத் தின்று விட்டார் .

அதனால் நேர்மையை கெடுத்துக் கொண்டு விட்டான் என கோபமுற்ற மூத்த சகோதரர் அந்த நாட்டு அரசனிடம் சென்று தன்னுடைய சகோதரர் திருடி விட்டான் என புகார் கூறினார் . அரசனும் அவரை அழைத்து விசாரித்தார் . அந்த மரத்தின் சொந்தக்காரரைக் கேட்காமல் பழத்தைப் பறித்துத் தின்றது திருட்டுக் குற்றமே என கருதி அவருடைய இரண்டு கைகளையும் வெட்டி விடச் சொன்னார் . என்ன செய்வது, இரு கைகளையும் இழந்தவர் தம்மைக் காப்பாற்றுமாறு வினாயகரை வேண்டிக் கொண்டே அந்த நதியில் குளிக்க இறங்க, வெட்டப்பட்ட கைகள் தாமாக அவருடைய உடலில் மீண்டும் சேர்ந்தது. அந்த அதிசயத்தைக் கண்டவர் கள் வினாயகரின் சக்தியைப் புரிந்து கொண்டனர் . அந்த நதிக்கும் அதனால் கையைக் கொடுத்த நதி என்ற அர்த்தம் தரும் பஹ_டா நதி என பெயரிட்டனா ; .

ஆலய மகிமை

அந்த கிணற்றில் உள்ள நீர் இன்றுவரை குறையவே இல்லையாம் . மேலும் ஒரு வியப்பான செய்தி என்ன எனில் நாளாக நாளாக அந்த வினாயகர் சிலையும் வளர்ந்து வருகின்றதாம் . முன்பு ஒரு முறை ஒரு பக்தர் வினாயகருக்குப் போட்ட கவசத்தை தற்பொழுது போட முடியவில்லையாம் . மூல கணபதியின் உருவம் கிணற்றுக்குள் உள்ளது. ஆனால் வயிறு பகுதிவரைதான் அது தெரிகின்றது. கிணற்றை ஆழப்படுத்த தோண்டிய பொழுது அந்த சிலையின் தலையில் மண்வெட்டி பட்டு சிவப்பு நிற நீர் வெளியே வந்தது அல்லவா , அதன்; விளைவாக அதன் தலையில் காயம் போன்ற வடு உள்ளது என்ற செய்தி வியப்பாக உள்ளது .

இன்னுமொரு வியப்பான செய்தி. அந்த ஊரில் திருட்டுக் குற்றம் செய்தவர் களை அந்த நதியில் குளிக்கச் சொல்லிய பின் வினாயகர் முன் சென்று திருட்டு சம்மந்தமாக உண்மையைக் கூறச் சொல்வார்களாம் . வினாயகர் முன் பயத்தினால் திருடனால் பொய் கூற முடியாது. அதனால் உண்மையைக் கூறி விடுவானாம் . இன்றும் இந்த வழக்கம் அந்த ஊரில் உள்ளதாம் . ஆகவே அந்த வினாயகரின் பெயர் உண்மைகளை வரவழிக்கும் வினாயகர் என ஆயிற்று.

ஆலயம் செல்லும் வழி : சித்தூரில் இருந்து சுமார் பதினோரு கி .மீ தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு செல்ல நேரடி பஸ் வசதிகள் உண்டு. அதைத் தவிற திருப்பதியில் இருந்தும் அந்த ஆலயம் செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள ...

சர்ச்சசையை கிளப்பும் தலைவர்கள் – மோகன் பகவத் ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின், பல்வேறு இடங்களிலும் ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முற ...

ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு பட்டியல் '' 2024ம் ஆண்டில் ஹிந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2,200 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான க ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டுக்குழு தலைவராக பி.பி சவுத்ரி நியமனம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப ...

மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வீணடிக்கும் சபா – ஜக்தீப் தன்கர் கவலை பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் பொது மக்களின் ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாட ...

வேற்றுமையில் ஒற்றுமை மிக்க நாடு இந்தியா : ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வேற்றுமையில் ஒற்றுமைமிக்க நாடு இந்தியா என்றும், பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...