மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை

மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பைரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும்  செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் குப்பையாகி விடுகின்றன.

சில உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகி விடுகின்றன.   கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் சேர்ந்து விண்வெளி குப்பை ஆக சுற்றி வருகின்றன.

இந்த விண்வெளிக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்களுக்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தகவல் தொடர்புகள் மற்றும்  டெலிவிஷன் ஒளிபரப்பு பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்பதற்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைக்கோள்களை தயாரித்து உருவாக்கி அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.
நானோ செயற்கைகோளில் காந்தவலை ஒன்று இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் செயற்கை கோள்கள் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். நானோ செயற்கை கோள் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...