உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அவரது பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பா.ஜ.க வின் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
5 மாநில தேர்தலில் மணிப்பூர் தவிர மற்ற_மாநிலங்களில் காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவே ஏற்பட்டுள்ளது . உ.பி.,யில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். என்றாலும் தோல்வியை தழுவி இருக்கிறார். இதற்கு காரணம், மத்தியில் காங்கிரஸ்_ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள், விலைவாசி உயர்வு போன்றவை தான்.
உ.பி தேர்தல்_முடிவு, காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் நாங்கள் எதிர்பார்த்தபடி தேர்தல்முடிவு அமையவில்லை. பஞ்சாபில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம் . கோவாவில் பா.ஜனதா வெற்றிபெற்று இருக்கிறது. இங்கு பா.ஜனதா நிறுத்திய 7 கிறிஸ்தவ_வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் .
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். முந்திய ஆட்சியின் ஊழல் குற்றசெயல்களுக்கு மக்கள் சரியான_பாடம் புகட்டியுள்ளார்கள்.
உத்தரகாண்ட்டில் பா.ஜ.க தனித்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்கும். மொத்தத்தில் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது இவ்வாறு கட்காரி கூறினார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.