சீன உறவில் அடுத்த கட்டம் – ஜெய்சங்கர்

”எல்லையில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், சீனாவுடனான உறவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில், 2020ல் சீன ராணுவம் நுழைய முயன்றது. அப்போது, இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல கட்ட பேச்சுகளுக்குப் பின், எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

சீனாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் லோக்சபாவில் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், ராஜ்யசபாவிலும் இது தொடர்பான அறிக்கையை அவர் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எல்லையில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, எல்லையில் பதற்றத்தை தணிப்பது தான் அடுத்த கட்டம். எல்லைக்கு அருகே, தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவது, ஆயுத தளவாடங்களை திரும்ப பெறுவது அந்தக் கட்டமாகும்.

லடாக் எல்லையில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, சீனாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பு எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, இரு தரப்பு உறவை மேம்படுத்த, எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். இரு தரப்பு உறவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பு, நலன், இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், சீனாவுடனான அடுத்த கட்ட பேச்சுகள் இருக்கும். இந்த பேச்சுகள் விரைவில் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...