ஓய்வூதியதாரர்களின் நலனை மேம்படுத்துதல், குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதிய செயல்முறைகளில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத் துறை 2024-ம் ஆண்டில் பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் சில முக்கிய முன்முயற்சிகளும் சாதனைகளும் பின்வருமாறு:
*ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது இத்துறை.
*800 நகரங்கள் / மாவட்ட தலைமையகங்களில் நடைபெற்ற டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்தில் 1.30 கோடி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, 39.18 லட்சம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களுடன் முக அங்கீகார முறை செயல்படுத்தப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது.
*1.06 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு சிபிஇஎன்ஜிஆர்ஏஎம்எஸ் தளத்தில் தீர்வு காணப்பட்டது.
*ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.
*தேசிய அனுபவ் விருதுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு தேசிய அனுபவ் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
*2 ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு 330 ஓய்வூதியர் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
*சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021-ன் கீழ் 9 ஓய்வூதிய படிவங்களை ஒருங்கிணைந்த ஒற்றை ஓய்வூதிய படிவம் 6ஏ ஆக இணைப்பதன் மூலம் புதிய ஒற்றை ஒருங்கிணைந்த ஓய்வூதிய விண்ணப்ப படிவ நடைமுறை 6-ஏ தொடங்கப்பட்டது.
*3200 ஓய்வூதியதாரர்கள் படிவம் 6ஏ-வைப் பயன்படுத்தி பவிஷ்யாவில் தங்கள் ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பித்தனர்.
*ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தலைமையில், ஓய்வு பெறவுள்ள அதிகாரிகளுக்கு உதவும் வகையில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பயிலரங்கம் ஜம்முவில் நடைபெற்றது.
*மற்றும் துறைகளில் ஓய்வூதியதாரர்களிடமிருந்து 1.06 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன் 21,860 குடும்ப ஓய்வூதிய வழக்குகளும் 9,818 சூப்பர் சீனியர் ஓய்வூதியர் வழக்குகளும் தீர்க்கப்பட்டன.
*சராசரி குறைகளைத் தீர்க்கும் நேரம் 36 நாட்களில் (2018) இருந்து 26 நாட்களாக (2024) குறைந்துது. 0.54% புகார்கள் மட்டுமே ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
*குறைகள் குறித்த மாதாந்திர அறிக்கைகள், குறை தீர்ப்பதில் அவற்றின் செயல்திறன் அடிப்படையில் அமைச்சகங்கள் / துறைகளின் தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது
*பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுடன் (CGDA) செயலில் ஒத்துழைத்து செயல்படுவதன் விளைவாக 2024 ஜனவரியில் 7,810 குறைகள் தீர்க்கப்பட்டன. இது 2023 டிசம்பரில் 4,288 ஆக இருந்தது.
*ஒன்பது பழைய வடிவங்களுக்கு பதிலாக பவிஷ்யா மற்றும் இ-ஹெச்ஆர்எம்எஸ்-ன் கீழ் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட படிவம் (படிவம் 6-ஏ) அறிமுகப்படுத்தப்பட்டது. 3,200 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2024-ல் இந்த டிஜிட்டல் செயல்முறையைப் பயன்படுத்தினர்.
*சிஜிஎச்எஸ் விண்ணப்ப செயல்முறை மார்ச் 2025 க்குள் பவிஷ்யாவுடன் இணைக்கப்படும். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பெற்ற முதல் நாளிலிருந்து பலன்களைப் பெற முடியும்.
*சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 புதிய வங்கிகள் பவிஷ்யாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
*ஓய்வூதிய விதிகள், நடைமுறைகள் குறித்து கள வங்கியாளர்களுக்கு கற்பிப்பதற்கான பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
*அகமதாபாத், ஜம்மு, தில்லியில் நடத்தப்பட்ட ஓய்வுக்கு முந்தைய பயிலரங்குகள் ஓய்வு பெறவெள்ளை 1840 அதிகாரிகளுக்குப் பயனளித்தன.
*ஓய்வூதியர் நலச் சங்கங்களுடன் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் ஆறு தொடர்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
*மத்திய அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச பணிக்கொடை வரம்பு 2024 ஜனவரி 1, முதல் ரூ. 20லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டது.
*மாதாந்திர மதிப்பாய்வுகள் குறை தீர்க்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்தன.
*ஓய்வூதியதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 500 க்கும் மேற்பட்ட வெற்றிக் கதைகள் 70 லட்சம் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் பகிரப்பட்டன.
*பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (POSH) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 2024ல் ஒரு பயிலரங்கு நடைபெற்றது.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |