கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புதியகட்சி தொடங்கிய சந்திரசேகரன் (51) என்பவர் நள்ளிரவில் வெடி குண்டு வீசி, வெட்டி கொல்லப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று காங்கிரஸ் கூட்டணி சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
ஆரம்ப காலத்தில் சந்திரசேகரன் (51). அச்சுதானந்தனின்
தீவிரஆதரவாளராக இருந்து வந்தார் , மார்க்சிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்துவந்தார். இந்நிலையில் கோஷ்டி சண்டையால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திரசேகரன் மார்க்சிஸ்ட்டில் இருந்து விலகி தனி அமைப்பை தொடங்கினார்.
மார்க்சிஸ்ட்டில் இருந்து விலகிய போது அவருக்கு பல முறை கொலை மிரட்டல் வந்தன. இந்நிலையில் காரில் வந்த கும்பல் அவரை வெடி குண்டுகளை வீசி வெட்டிக்கொலை செய்துள்ளது .
இதையடுத்து வட கரை பகுதி பதற்றமாக காணப்படுகிறது . கேரள முதல்வர் உம்மன்சாண்டி டெல்லியிலிருந்து வடகரைக்கு நேற்றுவந்தார். போலீசார் நான்கு பேரை பிடித்து விசாரித்து_வருவதாக கூறப்படுகிறது. இந்தகொலைக்கு சி.பி.எம் தான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.