தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஊழல் செய்ததற்காக உபி மாநில முன்னால் தலைமை மருத்துவ அதிகாரி சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசின் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மேம்பாடு திட்டத்தின் படி கிராம பகுதிகளில் மருத்துவ
மனைகளை மேம்படுத்துதல், நோய்தீர்க்கும் மருந்துகளை வாங்குதல், மற்றும் உபகரணங்களை வாங்குதல் போன்றவை மேற்கொள்ள பட்டன . இந்த திட்டத்தின் படி உபி,க்கு ரூ. 3500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பலாயிரம் கோடிகள் அதிகாரிகளால் விழுங்கபட்டது. லஞ்சப்பணம் பலருக்கும் கைமாறியது.
இதுதொடர்பாக சிபிஐ.,தனது விசாரணையை தொடங்கியதும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆர்யா , டாக்டர் பிபி.,சிங், யோகேந்திர சிங் சஷன் ஆகிய மூன்று பேர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டனர்.
இதை போன்று தங்களை காட்டிகொடுத்துவிடுவாரோ என அச்சத்தில் தலைமை மருத்துவ_அதிகாரி ஏகே.,சுக்லா சக அதிகாரியான டாக்டர் ஆர்யாவை கூலி படையை வைத்து அக்., 27 ம் தேதி 2010 ல் சுட்டு கொன்றார் என கூறப்படுகிறது . இந்தகொலைக்கு ஏகே.,சுக்லாதான் காரணம் என்று சிபிஐ., விசாரணையில் தெரிய வந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Leave a Reply
You must be logged in to post a comment.