நரேந்திர மோடியை ஹிட்லரின் பிரசார தலைவர் கோயபல்ஷிடன் ஒப்பிட்டதற்காக காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியை பா.ஜ.க கண்டித்துள்ளது . இது நெருக்கடிக்காலத்தைய மனோ நிலையிலிருந்து காங்கிரஸ் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் கூறியது: நாகரிகத்தின் அத்தனை வரையறை களையும் காங்கிரஸின் செய்திதொடர்பாளர் தாண்டி விட்டார் என்பதையே இது_காட்டுகிறது. நரேந்திர மோடி ஒரு ஒரு புகழ்பெற்ற மூத்த தலைவர். மிகச்சிறந்த நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறவர். அவரை கோயபல்ஸýடன் ஒப்பீடுசெய்து மணீஷ் திவாரி கூறியிருப்பது கண்டிக்கதக்கது. இது காங்கிரஸின் உண்மை நிறத்தை காட்டுகிறது.
இப்படி அநாகரிகமான மொழிகளை 1975-76-ல் காங்கிரஸ்_அடிக்கடி பயன்படுத்தி வந்தது. அப்போது காங்கிரஷால் இந்தியா அவசரநிலை காலத்தில் தள்ளப்பட்டிருந்தது. அந்த கால கட்டத்தில் தனது ஜனநாயக உரிமையை இந்தியா இழந்திருந்தது. . காங்கிரஸின் இந்த அணுகு முறை சோனியா காந்தியின் அணுகு முறையாகும். அவர் எப்போதும் எதிர் கட்சிகளின் விமர்சனத்தை பொறுப்பற்ற விமர்சனம் என்று தான் கூறுவார். என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.