அடுத்த மூன்று ஆண்டுகளில் மினரல் வாட்டர் விற்பனை ரூ.15,000 கோடியாக அதிகரிக்கும் என ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது .
ஆண்டுக்கு 19% வளர்ச்சியுடன் தற்போது ரூ.8,000கோடி சந்தை
மதிபை கொண்டுள்ள இத்துறை, நடப்பு நிதிஆண்டில் ரூ.10,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கபடுகிறது . சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை 40-45 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பு 9,000 கோடி டாலர் (ரூ.4.95 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களின் விற்பனை ரூ.4,000 கோடியாகவும், பிராந்திய அளவில் இயங்கி வரும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியாகவும், அமைப்பு சாரா நிறுவனங்களின் விற்பனை ரூ.1,600 கோடியாகவும் உள்ளது.
இத்துறையில் சுமார் 2,500 பிராண்டுகள் தற்போது உள்ளன. இவற்றில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு உள்ளூர் தயாரிப்புகளாக உள்ளன.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.