சவுதி அரேபியாவில் இருந்து டில்லி காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட, தீவிரவாதி அபு ஜுண்டால், மும்பை தீவிரவாத தாக்குதலின் போது , கராச்சியில் கட்டுப்பாட்டு அறையை அமைத்து, அங்கிருந்து தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டதையும் , அதற்கு முன்னதாக தீவிரவாதிகளுக்கு இந்தி பேச கற்று கொடுத்ததையும் பரபரப்பு வாக்குமூலமாக தந்துள்ளார்.
இவர் கடந்த 2006ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறி வங்கதேசம் வழியாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றடைந்துள்ளார் . அங்கு, அவருக்கு ரியாசத் அலி எனும் பெயரில், பாகிஸ்தான் பாஸ்போர்ட்பெற, லஷ்கர் தீவிரவாத அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது . பிறகு அவர் பாகிஸ்தானிலேயே தங்கி தீவிரவாத பயிற்சி பெற்றதாக தெரிகிறது.
அபுஜுண்டாலிடம், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் தெரிவித்திருப்பதாவது:
மும்பையில் தாக்குதல் நடப்பதற்குமுன்னதாக, லஷ்கர் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் என்னை அழைத்துப்பேசினர். 10 இளைஞர்களுக்கு, இந்திமொழி பேச கற்றுக்கொடுக்கும்படி என்னைக் கேட்டுகொண்டனர். என்னிடம் இந்தி பேச கற்றுக் கொண்டவர்கள்தான் மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள். மேலும் மும்பையில் பொதுவாக பயன்படுத்தபடும் வார்த்தைகளை அந்த இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி கூறினர். சந்தேகத்துக்கு இடம் தராமல் மும்பைவாசிபோன்று தோற்றம் அளிப்பது எப்படி என தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.
நான்சொன்ன யோசனையின் பேரில், அந்த தீவிரவாதிகள்10 பேரின்கையில், புனித கயிறை கட்டி அவர்களை மாணவர்களை போன்று மாற்றினோம். 24 மணி நேரத்துக்குள் தாக்குதல்முடிவடைந்து விடும் என நம்பினோம் . ஆனால், அஜ்மல் கசாப் கைதானது, தெரிந்து , லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஜாகிர் உர் ரகுமான்மாலிக் உட்பட பல தலைவர்களையும் கவலை அடையச் செய்தது.
தாக்குதல் நடந்த மறுநாள், என்னை சவுதி அரேபியாசென்று, அங்கு லஷ்கர் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும்_பணிகளை பார்க்கும்படி தெரிவித்தார் . குறிப்பாக, கேரளா ,ஆந்திராவை சேர்ந்தவர்களை அமைப்பில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார் என தீவிரவாதி அபு ஜுண்டால் தனது வாக்குமுலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.