பராசர முனிவரும் வேத வியாசரும

 பராசர முனிவரும்  வேத வியாசருமமுன்னொரு காலத்தில் வஷிஷ்ட முனிவருடைய சிஷ்யனான கல்மஷாபாதன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் நிறைய நற் பண்புகள் மிக்கவன். பல் வேறு பூஜைகள், யாகங்கள் என அனைத்தையும் செய்து வந்தவன். அதே நேரத்தில் காடுகளில் சென்று விலங்குகளை வேட்டையாடுபவன். அப்படி ஒரு நாள் வேட்டைக்குச்

சென்று இருந்த பொழுது வழியிலே குறுகலான இடத்தைக் கடக்க வேண்டி இருந்தது . அந்த இடத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது எதிரே மற்றொரு அந்தணன் வந்து கொண்டு இருப்பதைக் கண்டான்.

இரு வரும் பக்கத்துப் பக்கத்தில் நடந்து சென்றால் அந்த இடத்தைக் கடக்க முடியாது. எவராவது ஒருவர் பாதை ஓரம் விலகி நின்றால் மட்டுமே மற்றவர் மேற்கொண்டு செல்ல இயலும். அந்த அந்தணர் வசிஷ்டமுனிவரின் புதல்வாரன சக்தி என்பவர். அவரைப்பற்றி அந்த கல்மஷாபாதன் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவரை ஒதுங்கி நிற்குமாறு மன்னன் கூற சக்தி யோதான் ஒருமா பெரும் முனிவரின் மகன்தானும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதினால் அந்தணர் என்ற செருக்கோடு அந்த மன்னரிடம் கூறினார்' மன்னனே சாஸ்திரங்களின் விதிப்படி இருவர் உள்ள இடத்தில் பிராமணனே முக்கியத்துவம் பெறுவான். ஆகவே முதலில் நான் போக நீ வழி விலகி நில் '

அதைக் கேட்ட கல்மஷாபாதன் கடும் கோபமுற்றான். மன்னன் என்னை இழிவாகப் பேசி விட்டான் ஒரு அந்தணன், என கடும் கோபமுற்று அவரை நன்கு அடித்து சாலை ஓரம் தள்ளி விட்டு மேலே செல்லத் துவங்கினான். சக்தி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி துடித்தார். அவரும் கோபமுற்று அந்த மன்னன் மனிதகுல மாமிசம் தின்னும் ராக்ஷசனுடைய குணத்தைக் கொள்ளட்டும் என சாபமிட்டார். மன்னனும் அதன்படி மாமிசம் உண்ணும் குணம் கொண்டவனாக மாறி வசிஷ்டருடைய பிள்ளையான சக்தியையும் சேர்த்து அவருக்கிருந்த நுர்று பிள்ளைகளையும் கொன்றுத் தின்று விட்டான். அதைக் கேள்விப்பட்ட வசிஷ்டர் மிகவும் வருத்தம் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். முடியவில்லை. அதனால் அவர் சக்தியின் மனைவி அத்ரயன்த்தி என்பவளிடம் சென்று வசிக்கலானார்;.

அவளோ நிறைமாத கர்பிணி; .ஒருநாள் வீட்டில் எதோ மந்திர உச்சாடனை செய்யும் குரல் வந்ததைக் கேட்ட அவர் எங்கிருந்து அந்த ஒலி வருகின்றது என அவளைக் கேட்க அவளும் தன்னுடைய வ யிற்றில் உள்ள குழந்தைதான் வேதம் ஓதுகின்றது என்றாள். அவளுடைய கணவர் ஓதும் மந்திரங்களை வயிற்றில் இருந்த குழந்தை கற்றுக் கொண்டு அப்படி மந்திரம் ஓதியது. நாளடைவில் அவள் வயிற்றில் இருந்த குழந்தை வெளிவந்து நன்கு வளர்ந்தது. அதற்கு "பராசரா எனப் பெயரிட்டு வளர்த்தனர்".

தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட கதியை அறிந்து கொண்ட பராசரா அனைத்து இராட்ஷசர்களையும் அழிக்க சபதம் கொண்டு யாகம் ஒன்றைத் துவக்கினார். ராட்ஷசர்கள் அந்த யாககுண்டத்தில் விழுந்துகொண்டு மடிந்த வண்ணம் இருக்க வசிஷ்டர் வந்து அவரிடம் ஒரு ராக்ஷசன் செய்த தவறுக்கு எப்படி அனைத்து ராக்ஷசர்களும் பொறுப்பாக முடியும் என எடுத்துரைத்து நல்புத்தி கூற, பராசரரும் பிரும்மாவின் ஒரு மகனான புலஸ்த்யசி மகரிஷிக்கு அர்க்கயம் தந்து யாகத்தை நிறுத்தினார்.

பராசர முனி ஒரு முறை நதிக்கு சென்று மறு கரையை அடைய படகைத் தேடிய பொழுது ஒரு பெண் படகோட்டி மத்சய கங்கா என்பவளை பார்த்தார். அவள் மிகவும் அழகானவள், ஆனால் உடல் முழுதும் மீன் வாசனைக் கொண்டவள். அவள் படகில் ஏறி பயணம் செய்யும் பொழுது அவள் அழகில் மயங்கி அவளை சல்லாபிக்க பராசரா முனிவர் ஆசை கொண்டார். அவள் தன் நிலையைக் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தம்மை எவரும் பார்த்து விடாமல் இருக்க பயங்கரப் பனி மூட்டததை தன் சக்தியினால் ஏற்படுத்தி விட்டு அவளுடன் அந்தப் படகிலேயே உறவு கொண்டு விட்டார்.

நதியில் இன்னொரு இடத்தில் சிறிய தீவு ஒன்றையும் தன்னுடைய சக்தியினால் படைத்து அவளை அங்கு தங்க வைத்து ஒரு குழந்தைப் பெறச் செய்தார். அழகான குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தையும் உடனடியாகப் பெரிய வனாயிற்று. கறுத்த நிறத்தில் இருந்ததினால் கிருஸ்னா (கறுப்பு) எனவும், தீவில் பிறந்தால் துவைப்பயான (தீவு) எனவும் வரும் பெயரில் கிருஸ்ன துவைப்பயான வியாசா எனப் பெயர் இட்டனர். அவளுடைய உடல் நல்ல மணம் பெற்றது. அப்படி ஒரு மீனவளுக்கும் பராசரா முனிவருக்கும் இடையிலான உறவிலே பிறந்தவரே வேதங்களைப் படைத்த மாபெரும் வேத வியாச முனிவர் ஆவார்.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...