துக்காராமின் ஞானதிருஷ்டி!

 துக்காராமின்  ஞானதிருஷ்டி! சிரமப்பட்டு மார்வாடியிடமிருந்து நூறு வராகன் கடனாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இதையாவது நீங்கள் நல்ல •முறையில் வியாபாரம் செய்து லாபம் சம்பாதித்துக் கொண்டு வாருங்கள்!'' என்று கூறி, மிகுந்த கவலையுடன் அந்தப் பணத்தை அவர் கையில் கொடுத்தாள் மனைவி கமலாபாய்.

""எல்லாம் பாண்டுரங்கள் அருள்! நான் என்ன செய்யப் போகிறேன்?'' என்று சொல்லிக் கொண்டே அதைக் கையில் வாங்கிக் கொண்டு, மாடுகளைப் பூட்டி வண்டியில் ஏறி உட்கார்ந்து சென்றார் துக்காராம். துக்காராமின் மனம் குடும்ப விவகாரங்களில் ஈடுபடவில்லை. கண்களை
‰மூடித்தியானத்தில் அமர்ந்து விடுவார். ஏழைகள் வந்து கேட்டால் இலவசமாகவே தானியத்தை அள்ளிக் கொடுத்து விடுவார். மனைவியோ புதல்வர்களோ கோபித்துக் கொண்டால், ""நானா செய்கிறேன்? பாண்டுரங்கன் அல்லவா என்னைச் செய்யச் சொல்லுகிறான்?'' என்று சி›த்துக் கொண்டே பதில் சொல்லுவார்.

ஊ›ல் பஞ்சம் உண்டாயிற்று. கடைகளில் தானியம் கிடைக்கவில்லை. ஏழைகள் பசியால் மடியத் தொடங்கினார்கள். வீட்டில் இருந்த தானியம்  எல்லாவற்றையும் அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கத் தொடங்கி விட்டார் துக்காராம். இரு பிள்ளைகளுக்கும் கோபம் தாங்கவில்லை. ""இந்தப் பைத்தியக்காரத் தந்தையுடன் நாங்கள் இருக்க மாட்டோம்!'' என்று
கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டார்கள். மனைவி கமலாபாய்க்குத் துக்கம் தாங்கவில்லை. இருந்தாலும் என்ன செய்வது? கணவனைக் காப்பாற்றுவது அவளுடைய பொறுப்பல்லவா?
 துக்காராம்
தானிய ‰‰மூட்டைகளுடன் துக்காராம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. இடியும் மின்னலுமாக இருந்தது. ஒரு மரத்தடியில் மாடுகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு, மழை பெய்யாத இடமாகப் பார்த்து ஒரு பாறையில் அமர்ந்து பாண்டுரங்க பஜனை செய்யத் தொடங்கினார் துக்காராம். காலையில் கண்விழித்துப் பார்த்த போது மாடுகளைக் காணோம். தானிய ‰‰மூட்டைகள் எதுவுமே இல்லை. துக்காரா•க்கு என்ன செய்வது என்று தெ›யவில்லை. வீட்டுக்குப் போய் மனைவியிடம் இதைச் சொல்ல
மனமில்லை.

""பாண்டுரங்கா! நீதான் காப்பாற்ற வேண்டும்'' என்று கூறி வேண்டிக் கொண்டு, அங்கேயே தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். வண்டி மாடுகளின் மணி சத்தம் கேட்டுக் கமலாபாய், வீட்டு வாசலில் வந்து நின்றாள். துக்காராம் இறங்கி மகிழ்ச்சி ததும்பும் •கத்துடன் அவளிடம், ""இந்தா நூற்று நாற்பது வராகன்! நாற்பது வராகன் லாபம்'' என்று சொல்லிக் கொடுத்தார். அவளுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. கணவனைப் பாராட்ட தொடங்கினாள். ""தான் ஆற்றங்கரைக்குப் போய் குளித்து விட்டு வந்துவிடுகிறேன்'' என்று துக்காராம் வெளியே போய் விட்டார். பட்சணங்களைச் செய்து •‰முடித்து விட்டு, நூறு வராகனை மார்வாடியிடம் கொடுத்துவிட்டு நகைகளை வாங்கிவரப் போனாள் கமலாபாய். அவளைக் கண்டதும் மார்வாடி, ""உங்கள் கணவர் இப்போது தானே நூறு வராகனைத் திரும்பக் கொடுத்துவிட்டு, நீங்கள் வந்து கேட்டால் நகைகளைக் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போனார்? இந்தாருங்கள் உங்களுடைய நகைகள்'' என்று எடுத்துக் கொடுத்தார். கமலாபாய்க்கு ஒரே வியப்பு. இரட்டை லாபம் சம்பாதித்துக் கொண்டு வந்த கணவனைப் பாராட்ட அவசரமாக வீடு திரும்பினாள். கணவனைக் காணோம்!

இரவு நேரமாகி விட்டது. கணவனைக் காணோமே என்று தேடிக்கொண்டு சென்றாள். பக்கத்து ஊரில் உள்ளவர்கள் வந்து சொன்ன தகவலை ஏற்று அங்கே போய்ச் சேர்ந்தாள். மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்து அமர்ந்திருந்த துக்காராமைக் கண்டு காலடியில் விழுந்து வணங்கினாள்.

""சுவாமி! நீங்கள்தான் நூறு வராகனுக்கு இரு நூற்று நாற்பது வராகன் சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டீர்களே? இன்னும் என்ன கவலை? வீட்டுக்கு வாருங்கள்!'' என்று அழைத்தாள். துக்காரமிற்கு ஒன்றுமே பு›யவில்லை மனைவிடம் நடந்ததைச் சொல்லச்
சொல்லிக் கேட்டார். அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன. ""கமலா! நான் அங்கே வரவே இல்லை. பாண்டுரங்கனே எனக்குப் பதிலாக வந்து உனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான். உனக்குக் கிடைத்த த›சனம் எனக்கும் கிடைக்கவில்லையே? நீயல்லவா கொடுத்து வைத்தவள்!'' என்று கூறிப் புலம்பினார்.

பண்ட›புரத்தில் ஏகாதசித் திருநாள் விசேஷமானது. துக்காராம் அன்று அங்கே போய் சந்நிதானத்தில் பாண்டுரங்கனைப் பற்றிப் பஜனைப் பாடல்கள் பாடுவார். அதைக் கேட்க மக்கள் திரளாக வந்து கூடுவார்கள். சத்திரபதி சிவாஜி அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். தானும் அங்கே போய் பஜனையில் கலந்து கொள்ள விரும்பினார். மாறுவேடம் அணிந்து அங்கே போய்க் கூட்டத்தில் ஒருவராக உட்கார்ந்து கொண்டு விட்டார். இதைப்பற்றிய தகவல், ஒற்றர் ‰‰மூலம் ஒளரங்கசீப்புக்குக் கிடைத்து விட்டது. சிவாஜியை வளைத்துப் பிடிக்கப் படைகளை அனுப்பி வைத்தான். கோயிலைப் படைகள் சூழ்ந்து கொண்டன. உள்ளே பக்தர்கள் திகைத்துப்
போனார்கள். துக்காராம் இதை ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டார்.

 சிவாஜி துக்காராம்""பாண்டுரங்கா! உன்னை நம்பி வந்த
சத்ரபதியைக் காப்பாற்று!'' என்று
தியானித்துக் கொண்டு பஜனையைத்
தொடர்ந்தார்…

திடீரென்று கோயிலுக்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டது. குதிரை மீது ஏறி சிவாஜி தப்பித்துச் செல்வது தெரி›ந்தது. படைகள் அவரைத் துரத்திக் கொண்டு ஓடின. காடுகள், மலைகள், ஆறுகளைக் கடந்து சிவாஜியின் குதிரை மின்னல் வேகத்தில் ஓடி விட்டது. படைகள்
சிவாஜியைத் துரத்திப் பிடிக்க மு•டியவில்லை! துக்காராம் பஜனையை •முடித்துக் கொண்டு வெளியே வந்தார். அவரை வணங்கி ஆசிகளைப் பெற்று, நிதானமாகத் தனது குதிரையில் ஏறி,
பத்திரமாக ஊருக்குப் போய்ச் சேர்ந்தார் சிவாஜி.

மொகலாயச் சக்கரவர்த்தியின் படைகள் துரத்திச் சென்றது மாறுவேடத்தில் வந்த
சிவாஜியை அல்ல; பக்தனுக்காகச் சிவாஜியைப் போலவே தோன்றி படைகளைத் திருப்பிவிட்டது. பாண்டுரங்கனின் செயல். துக்காராம் நாமதேவ›ன் மறு அவதாரம் என்று சொல்வார்கள். பாண்டுரங்கன் மீது அவர் எழுதி வைத்த பஜனைப் பாடல்கள் ஏராளம்.
பஜனை செய்தபடியே ஆண்டவன் அனுப்பிய விமானத்தில் ஏறி, அவர் உலக வாழ்க்கையை மு•டித்துச் சென்று விட்டதாகச் சொல்லுவார்கள். மகாராஷ்டிரத்தில் துக்காராமின் சமாதி புனாவுக்குப் பன்னிரண்டு மைல்கள் தொலைவில் "தேகுரோட்' என்ற இடத்தில் இருக்கிறது. இன்றும் ஏராளமான பக்தர்கள் அங்கே போய், அவரை வழிபட்டுத் திரும்புகிறார்கள்.

நன்றி சன்மிஷ்டை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...