தனக்கு கடைசிகாலம் நெருங்கிவிட்டதை முன்னரே தெரிந்துகொண்ட ராஜேஷ் கன்னாவின் கடைசி ஆசைப்படி இறுதி ஊர்வலம் மிக பிரமாண்டமாக நடத்தப் பட்டது.
பாலிவுட் முன்னாள் சூப்பர்_ஸ்டார் ராஜேஷ் கன்னா நேற்று_முன்தினம் இறந்தார். முன்னணி இந்தி நடிகர், நடிகைகள் இறுதி_அஞ்சலி செலுத்தினர். நேற்று உடல்தகனம் நடந்தது. இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன்பே தனது இறுதி காலம் நெருங்கிவிட்டதை ராஜேஷ் கன்னா தெரிந்து கொண்டாராம்.
தனது உடல்நிலை மோசமடைவதை தெரிந்துகொண்ட ராஜேஷ் கன்னா குடும் பத்தினரை அழைத்து, ‘என் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது எனக்குதெரியும். மருந்து மாத்திரை எனக்கு வேலை செய்ய வில்லை. எனக்கு நேரம் நெருங்கி விட்டது’ என கூறி இருக்கிறார்.
தனது இறுதிசடங்கு பெரியளவில் நடக்கவேண்டும் என அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதே போல் அவரது இறுதிசடங்கு நடத்தப்பட்டது.
பூக்களால் அலங்கரிகப்பட்ட வாகனத்தில் ஒரு இளவரசருக்குதரும் மரியாதை போல் தந்து இறுதி சடங்கை நடத்தினர்.
ராஜேஷ் கன்னா மறைவுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் இன்று அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது . இதில் பாலிவுட் ஸ்டார்கள் பங்கேற்கின்றனர்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.