பங்களாதேசிகளின் குடியேற்றம் இந்தியாவின் மீதான அமைதி தாக்குதல்

 முன்பெப்போதும் இல்லாத வகையில் நடந்த அசாம் வன்முறைகள் நமது நாட்டின் புகழுக்கு களங்கம் விளைவிப்பவை என மதிப்புமிக்க பிரதமர் அவர்கள் மிகச் சரியாக விவரித்திருக்கிறார். இதுபோன்ற வன்முறைகளுக்கு நாகரீகமான சமூகத்தில் இடமில்லை. நான்கு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்தது, 100 மேற்பட்ட நபர்கள்

கொல்லப்பட்டது மற்றும் சமூக ஒற்றுமை குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளது ஆகிய உண்மைகள் அசாம் மாநிலத்தில் அரசு எந்திரம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் சான்றுகளாகும். உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அல்லது சொத்துக்களை இழந்தவர்களுக்காக எங்கள் இதயம் வருந்துகிறது. முன்பெப்போதுமில்லாத இந்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவும் வகையில் உதவி மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அதி முக்கியமானதாகும்.

இந்தச் சூழல் ஏன் உருவானது?

ஒரு பகுதியில் உள்ள வெவ்வேறு பிரிவு மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை விகிதாச்சாரங்களில் ஏற்படும் மாற்றம் அந்தப் பகுதியின் அல்லது மாநிலத்தின் தன்மையை பாதிக்கிறது. எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய பகுதிகளின் மக்கள் தொகை விகிதாச்சாரங்களைப் பாதுகாக்கும் மரபை இந்தியாவில் நாம் எப்போதும் கொண்டிருந்திருக்கிறோம். மக்கள் தொகை விகிதாச்சாரங்கள் பாதுகாக்கப்படும் இடங்களுக்கு மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளை உதாரணமாகக் கூறலாம், ஏனென்றால் இந்தப் பகுதிகளின் சமூக கலாச்சாரத் தன்மையின் ஒரு பகுதியாகத் தொன்றுதொட்டு இருந்துவரும் நிலம், பொருளாதாரம், மற்றும் காலாச்சாரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டவை. சுதந்திரத்துக்கு முன் இருந்த அசாம் தலைவர்கள் சிலரால் இந்த உண்மை புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. “அசாமிய மொழி மற்றும் அசாம் கலாச்சார அடிப்படையில் அசாம் பகுதி ஒழுங்கமைக்கப்படாத வரையில் அசாமைச் சேர்ந்தவர்களும் அவர்களின் கலாச்சாரமும் பிழைத்திருப்பது சாத்தியமில்லாமல் போகும். பெங்காலி பேசும் மக்களைக் கொண்ட சச்சார் மாவட்டம் சேர்ப்பு மற்றும் தரிசு நிலங்களில் லட்சக்கணக்கான வங்கதேசத்தவரின் குடியேற்றம் அல்லது தருவிப்பு ஆகியவை அசாமின் தனிச் சிறப்பான கலாச்சாரத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது மேலும் பல ஒழுங்கீனங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தன்னுடைய 1945 தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிலை காலம் சென்ற ஸ்ரீ கோபி நாத் போர்டோலாய் அவர்களின் திடமான நம்பிக்கையாக இருந்தது , ஸ்ரீ கோபி நாத் போர்டோலாய் அவர்கள் தலைமையிலான காங்கிரஸின் உறுதியான நம்பிக்கையாக இது இருந்தபோதிலும், இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு கட்சி தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டுவிட்டது. மத்திய அமைச்சர்களான அதனுடைய முக்கியமான அசாம் தலைவர்கள் இருவர் மாற்றுக் கொள்கையைப் பரிந்துரைத்தனர். இதனால் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து (பிற்கால வங்கதேசம்) பெருமளவில் சட்ட விரோதமான குடியேற்றம் நிகழ்ந்த்து. இதனால் அசாமின் மக்கள் தொகை விகிதாச்சாரம் மாற்றப்பட்டது. 1971க்கு முந்தைய இந்த சந்தர்ப்பவாதக் கொள்கை தேசியப் பாதுகாப்பு, மக்கள்  தொகை விகிதாச்சாரங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டது, மேலும் அசாமுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக இருந்த யுத்த முக்கியத்துவம் வாயந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்துவிட்டது. இந்தியாவுக்கு எதிராக ஆயிரம் ஆண்டுப் போருக்கு உறுதி பூண்ட சுல்ஃபிகர் அலி பூட்டோ தன்னுடைய புத்தகமான ‘மித்ஸ் ஆஃப் இன்டிபென்டண்ஸ்’இல், “சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முக்கியமானது என்றாலும் காஷ்மீர் மட்டுமே இந்தியா, பாகிஸ்தானைப் பிரிக்கும் ஒரே பிரச்சினை இல்லை. குறைந்தபட்சம் அசாம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள சில மாவட்டங்களும் காஷ்மீர் அளவுக்கு முக்கியமானவை. இவற்றின் மீது பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.

ஷேக் முஜிபூர் ரெஹ்மான் போன்ற இந்தியாவுக்கு ஆதரவான தலைவர்கள்கூட, அவருடைய “கிழக்கு பாகிஸ்தானும் அதனுடைய மக்கள்தொகை பொருளாதாரமும்” என்ற புத்தகத்தில் “கிழக்கு பாகிஸ்தான் தன்னுடைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும், அசாம் பெருமளவில் காடுகள், கனிம வளங்கள், நிலக்கரி, பெட்ரோலியம் இன்ன பிறவற்றைக் கொண்டிருப்பதால், கிழக்கு பாகிஸ்தான் பொருளாதாரம் மற்றும் நிதி வருவாயில் பலத்துடன் திகழ்வதற்கு அசாமை அது தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியப் பகுதியை அதனுடைய ராணுவ வலிமையால் பிடிப்பது சாத்தியமில்லை. எனவே குடியேற்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது மாற்று வியூகத் திட்டமாகும். நம் அண்டை நாட்டவரின் அக்கறையும் காங்கிரஸின் வாக்கு வங்கி பற்றிய அக்கறையும் ஒரு புள்ளியில் இணைகிறது. லட்சக்கணக்கான குடியேற்றங்களால் இந்தியா மீது அமைதியான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

குடியேறியவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பும் காங்கிரஸ் கட்சியின் இப்போதைய மாற்று செயல்திட்டம் கடினமானது இல்லையென்றாலும் சாத்தியமில்லாதது. மிகவும் தாராளவாதப் போக்குக் கொண்டவரும் ஆணித்தரமான எழுத்தாளருமான லார்ட் டென்னிங்ஸ் ‘தி டியு கோர்ஸ் ஆஃப் லா’ என்ற தன்னுடைய புத்தகத்தில் ‘என்ட்ரன்ஸ் அண்ட் எக்ஸிட்’ எனத் தலைப்பிடப்பட்ட பாகம் 5க்கான அறிமுகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார். “சமீப காலங்களில் இங்கிலாந்து தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது – எதிரிகளாலும் இல்லை நண்பர்களாலும் இல்லை, ஆனால் இங்கிலாந்தை சொர்க்கம் என நினைப்பவர்களால் நடந்திருக்கிறது” என எழுதியிருக்கிறார். அவர்களுடைய சொந்த நாட்டில் ஏழ்மை, நோய் மற்றும் வீடில்லாதவர்கள். இங்கிலாந்தில் சமூகப் பாதுகாப்பு – தேசிய சுகாதார சேவை மற்றும் உத்தரவாதமான வீட்டு வசதி ஆகியவை பணமின்றியும் அதற்கென்று மெனக்கெடாமலும் கிடைக்கிறது. இங்கே வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவருடைய உறவினர்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள அழைத்து வருகின்றனர். எனவே அவர்கள் மிகுதியாகிக்கொண்டே போகின்றனர்”.

சதித்திட்டம் தொடர்கிறது

 அங்கீகாரமின்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களைத் தடுப்பதற்காக வெளிநாட்டவர் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமின்றி இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் என ஒரு நபர் மீது சந்தேகம் வந்தால், அவருக்கு ஒரு அறவிப்பு கொடுக்கப்படும், தான் வெளிநாட்டவர் அல்ல சட்டபூர்வமான இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்று சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. 1983ல் IMDT சட்டம் அசாமுக்காக மட்டும் செயல்படுத்தப்பட்டது. வெளிநாட்டவர் சட்டத்துக்கான விதிவிலக்கு இது. ஆட்டத்தின் விதிகள் மாற்றப்பட்டன. சந்தேகத்துக்குரியவர் தான் வெளிநாட்டவர் அல்ல என தன்னை நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு இல்லை. அதற்கு பதிலாக அவரை வெளியேற்றும் முன் அவர் வெளிநாட்டவர் என்று நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது மாநில அரசினுடையது. சட்டத்துக்குப் புறம்பான குடியேற்றத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி அசாம்தான். அதனுடைய மக்கள்தொகை விகிதாச்சாரம் மாறிவிட்டது. அசாமியர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இருந்தாலும் அசாமை வெளிநாட்டவர்களின் சொர்க்கமாக்க காங்கிரஸ் கட்சி சதித்திட்டத்தில் ஈடுபட்டது.

இந்தியாமீது கிட்டத்தட்ட அமைதியான ஒரு ஆக்கிரமிப்பை ஊக்குவித்த சட்டம் எனக் கூறி 12/7/2005 தேதியிட்ட தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் IMDT சட்டத்தை ரத்துசெய்தது. வெளிநாட்டவர் சட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து வெளியேற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நடைமுறைகளை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் செயல்படத்துவதற்குபதிலாக, வெளிநாட்டவர் சட்டத்தில் உள்ள விதிகளை அரசு இப்போது மாற்றிவிட்டது. IMDT சட்டத்தில் இருந்த அதே திருட்டுத்தனத்தை நுழைப்பதற்கு விதிகள் மாற்றப்பட்டன. சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவர் தான் சட்ட விரோதமாகத் தங்கவில்லை என்பதை நிரூபிப்பதற்குப் பதிலாக அவர் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கிறார் என நிரூபிக்கும் கடமையை இப்போது மாநில அரசு மீது சுமத்தியுள்ளது. 5/12/2006 தேதியிட்ட தன்னுடைய தீர்ப்பில் இந்த விதி சட்டத்தின் வரம்புக்கு மீறிய ஒன்று எனக் கூறியுள்ளது. இருந்தபோதிலும் இந்தச் சூழலிலும் அரசு தொடர்ந்து வெட்கமில்லாமல் இதனை சட்டை செய்யாமல் இருந்துவருகிறது.

பாதுகாப்பு மீதான தாக்கம்

இன்று 676.47 கிமீ தூரமுள்ள இந்தியா-வங்கதேச எல்லை வேலியில்லாமல் இருக்கிறது. அசாமின் அனைத்து எல்லை மாவட்டங்களிலும் மக்கள் தொகை விகித்த்தில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 27 மாவட்டங்களில் 11இல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த வகையில் அசாமிய இனச் சிறுபான்மையினரை நான் குறிப்பிடவில்லை. டுப்ரி மற்றும் கோக்ரஜார் போன்ற மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கதேச எல்லையில் உள்ள டுப்ரி 70% சட்ட விரோதக் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2011க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின் அதிகாரபூர்வ எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. எண்ணிக்கை 80%ஐயும் தாண்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை நம்மால் காண முடியவில்லையா? இந்தப் பகுதிகள் அசாமையும் இந்தியாவின் பிற பகுதியையும் இணைக்கும் கழுத்துப் பகுதிக்கு அருகில் இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்புக்குத் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

அரசின் அணுகுமுறை

அரசின் அணுகுமுறை முழுவதும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. அரசு இதைத் தற்காலிகமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக கையாளுகிறது. அரசின் அனைத்துக் கருத்துக்களும் இந்த திசையிலேயே இருக்கிறது. அமைச்சருக்கு லட்சிய நோக்கு இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். அது தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்வதற்குச் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் தருவிக்க வேண்டியதில்லை. இதற்கான விலையை அசாம் மற்றும் இந்திய மக்கள் கொடுக்கிறார்கள். இந்த நெருக்கடி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இல்லை. இது அசாமியர்களின் பிரச்சினை இல்லை. இது திட்டமிட்ட சதித்திட்டத்தினால் அசாமின் சமூக அமைப்பு மீது நிகழ்த்தப்படும் தாக்குதலின் நேரடியான மற்றும் நியாயமற்ற விளைவாகும் . சில தினங்களுக்கு ராணுவத்தைக் கொண்டுவருவதாலோ, உதவி முகாம்களை ஏற்படுத்துவதாலோ பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. அரசு இந்த சட்ட விரோதக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்; எல்லைப் பகுதி முழுவதிலும் வேலி அமைக்கப்பட வேண்டும்; அந்நியரை அடையாளம் காணுதல் மற்றும் திருப்பி அனுப்பதல் உடனே தொடங்கப்பட வேண்டும்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.