ராமேஸ்வரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் கடற்கரை பகுதியில் வாளை தீவுக்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் கீழக்கரை அருகே பெரியபட்டினம் என்ற கடலோரா கிராமம் உள்ளது . இந்த கிராமத்தை சேர்ந்த பலர் சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்பட வெளிநாடுகளில் வேலை பார்கின்றனர். இவர்களில் பலர் டிசம்பர்மாத விடுமுறையில் சொந்தஊருக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள குருசடை தீவு, அப்பா தீவு, முள்ளித்தீவு, வாழைத்தீவு, முயல் தீவு போன்ற தீவுப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம்.
இன்று காலை சீனி உருது என்பவரது குடும்பத்தினரும் அவரது உறவினர்களும் இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளில் பெரியபட்டிணத்திலிருந்து அப்பா தீவு மற்றும் முள்ளி தீவுக்குபுறப்பட்டனர். ஒரு படகில் ஆண்களும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்களும் சென்று கொண்டிருந்தனர்.
தீவுக்கு சிறிது தூரத்தில் பெண்கள் வந்த படகை காணவில்லை. படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டியதூரம் வரை காணவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர் .
இது குறித்து தகவலறிந்து கடலோர காவல் படை, இந்திய கடற்படை மற்றும் பெரியபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஆகியோர் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே கானாமல் போன படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடலில் மிதந்தபடி போராடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.