உலகப் பற்றற்றவனுக்கு அலை பாயும் மனதை அடக்கி வைப்பது கடினம் அல்ல

 உலகப் பற்றற்றவனுக்கு  அலை  பாயும் மனதை  அடக்கி  வைப்பது  கடினம்  அல்லமுன்னொரு காலத்தில் வாரணாசியில் மௌன சாது என்பவர் ஒருவர் இருந்தார். அவர் நகரங்களிலும், கிராமங்களிலும் நடைப் பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்காங்கே சென்று அங்குள்ள மடங்களிலும், ஆலயங்களிலும் தங்குவார். எங்கு சென்று தங்குகிறாரோ அங்கு ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து கொண்டு விடுவார். காலை, மாலை

குளிப்பது, இயற்கை உபாதைக் கழிப்பது என்ற இரண்டையும் தவிர வேறு வேலைக்கு செல்ல மாட்டார். யாருடனும் அதிகம் பேசமாட்டார். யாராவது ஏதாவது கொண்டு வந்து கொடுத்தால் உண்பார். இல்லை என்றால், ஆலயங்களில் கிடைக்கும் பிரசாதங்களை மட்டுமே உண்பார். அவ்வளவுதான். அவரை ஊமை என்றே பலரும் நினைத்தார்கள். பல மணி நேரம் அதே இடத்தில் மௌனமாகவே அமர்ந்து இருப்பார். ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் பேசினால் அதுவே அதிகம் என்று இருந்தார். யாராவது ஏதாவது கேட்டால் மிக அவசியம் என்றால் தவிர பதில் கூட கூற மாட்டார்.

அவர் ஒருமுறை ரிஷிகேசத்துக்குச் சென்று ஒரு மடத்தில் தங்கினார். அவர் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. அமைதியான முகத்தைக் கொண்டு இருந்தார். சில நாட்கள் அங்கு தங்கி இருந்த அவருடைய எளிமையைப் பார்த்த மாடாதிபதி அவரை அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தது மட்டும் இன்றி தினமும் அவருக்கு உணவும் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

மௌன சாமியாரிடம் தினமும் நிறைய பக்தர்கள் வந்தார்கள். அவர் வந்தவர்களுடன் எதுவும் பேசமாட்டார். தனது செய்கையாலேயே வாழ்த்தி அனுப்புவார். ஆனால் அவரிடம் வந்து விட்டுச் போனால் எதோ ஒரு விதத்தில் தம்முடைய வாழ்க்கையில் நன்மைகளை அடைந்து வந்ததினால் அந்த மௌன சாமியார் மீது மக்களுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டது. அவரை வந்து வணங்கினாலேயே தம் மனத் துயர் தீர்ந்தது போல இருந்ததை உணர்ந்தார்கள். ஆகவே தினம் தினம் அவரை வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்கள் தரும் அனைத்து காணிக்கையையும் அவர் வந்தவர்களுக்கே கொடுத்து அனுப்பி விடுவார்.

அப்போது அங்கு இன்னொரு சன்யாசியும் வந்திருந்தார். அவர் பல ஜால வித்தைகளை கற்றறிந்தவர். மாய மகிமைகள் செய்பவர். அவரை மாய சன்யாசி என்பார்கள். அவரும் அந்த மடத்திலேயே தங்கினார். அவரிடம் இருந்த தந்திரக் கலையினால் அவருக்கும் மக்கள் வந்தார்கள். அவர் வந்தவர்களுக்கு தாயத்து கொடுப்பது, மந்தரித்து அனுப்புவது போன்றவற்றை செய்து வந்தார். கிடைக்கும் காணிக்கைகளை தம்மிடமே வைத்துக் கொள்வார். ஒரு சமயத்தில் அவர் வங்கியில் கணக்கும் வைத்துக் கொள்ளும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு மடாதிபதி இலவசமாக இடமோ, உணவோ கொடுக்கவில்லை. அவரிடம் இருந்து சிறிது காணிக்கையைப் பெற்றார். மாய சஞாசியும் அதைப் பொருட்படுத்தவில்லை. மாய சாமியார் எப்போதாவது மௌன சாமியாரைப் பார்த்து போலியாக சிரிப்பார். அவ்வளவு தொடர்ப்பு மட்டுமே அவருடன் கொண்டு இருந்தார்.
நாளடைவில் மாய சாமியார் மௌன சாமியாருக்கு வந்த மக்களைப் பார்த்தார். அவர் மீது பொறாமை கொண்டார்.

மெல்ல மெல்ல அந்த மடாதிபதியை எப்படியோ தன் கைக்குள் போட்டுக் கொண்டார். ஒரு நாள் அவரிடம் ' நாம் யாரையும் சோம்பேறியாக்கக் கூடாது. உழைத்து சாப்பிட்டால்தான் பலன் இருக்கும். உங்களுக்கு இந்த மௌன சாமியாரினால் நிறைய ஆதாயம் உள்ளது என்பதற்காக அவரை இங்கு வைத்துக் கொண்டு இலவசமாக ஏன் உணவு தர ஏற்பாடு செய்து உள்ளீர்கள்? அவருக்கு கிடைக்கும் பொருட்களை அவர் மடத்துக்கா கொடுக்கிறார்?. அப்படியே வந்தவர்களுக்குக் கொடுத்து அனுப்பிவிட்டு அவரல்லவா பெயர் தட்டிக் கொள்கிறார். அதனால் உங்களுக்கோ, உங்கள் மடத்துக்கோ என்ன ஆதாயம் ' என்றெல்லாம் கூறி அவர் மனதைக் கலைத்தார். மடாதிபதியும் யோசனை செய்தார். அடுத்த மாதம் முதல் மடாதிபதி மௌன சாமியாரிடம் தம்முடைய மடத்தில் அதிக வருமானம் இல்லை என்பதினால் தம்மால் இனி இலவசமாக உணவு கொடுக்க முடியாது என்றும், அவருக்கு வரும் காணிக்கைகளை தம் மடத்துக்கு தருமாறும் கேட்டார். மாய சாமியார் கூறியது எதையுமே அவரிடம் கூறவில்லை. மௌன சாமியார் புன்முறுவல் செய்தார். பதில் எதுவும் கூறவில்லை. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி அந்த மடத்தின் எதிரில் இருந்த பாழடைந்த ஆலயத்து வாயிலில் இருந்தக் கூடத்தில் சென்று தங்கினார். தினமும் அவர் குளித்தப் பின் ஆலய தரிசனம் செய்தப் பின் அங்கும் இங்கும் ஆலயங்களுக்கு சென்று பிரசாதத்தை பெற்று வருவார். அதை உண்டப் பின் மீண்டும் அந்த பாழடைந்த ஆலய வாயிலில் வந்து மெளனமாக பல மணி நேரம் மீண்டும் அமர்ந்து விடுவார். அவர் அங்கிருந்தாலும் அவரிடம் அங்கும் மக்கள் வந்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டு சென்ற வண்ணம் இருந்தார்கள்.

அதைக் கண்ட மாய சன்யாசிக்கு மனதில் இன்னும் அதிக கோபம் எழுந்தது. 'இது என்னடா, நாம் அவரை இங்கிருந்து கிளப்பியும் அவர் அசையவில்லை. எதிரில் உள்ள ஆலயத்தில் சென்று அமர்ந்து கொண்டு விட்டார். அங்கும் அவரிடம் மக்கள் செல்கிறார்கள். அவருக்கு மதிப்பு அதிகமாகிறதே தவிர குறையவில்லை. என்னிடமோ சொற்ப அளவிலேயே மக்கள் வருகிறார்கள். அதுவும் போதாதென்று அவரால் எப்படி எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் மெளனமாக பல மணி நேரம் அமர்ந்து இருக்க முடிகிறது? அதை அவரிடமே கேட்டு விடலாம்' என்று எண்ணிக் கொண்டு அவரிடம் சென்று இனிமையாகக் கேட்டார் ' ஸ்வாமி , நீங்கள் யார்?, உங்களால் எப்படி பல மணி நேரம் ஒரே இடத்தில் மெளனமாக அமர்ந்து கொண்டு இருக்க முடிகிறது?'. மௌன சாமியார் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் புன்முறுவல் செய்தபடி 'அரை மணி நேரம் பொறு, கூறுகிறேன்' என்று ஒரே ஒரு வரி பதிலை மட்டுமே கூறினார்.

அரை மணி நேரம் கழிந்தது. மாய சாமியார் அந்த மௌன சாதுவிடம் சென்றார். மீண்டும் அதே கேள்வி, மீண்டும் அதே பதில் என்று கிடைக்க சென்று விட்டார். இப்படியாக இரண்டு நாள் முழுவதும் அதே கேள்வி, அதே பதிலில் பொழுது கழிந்தது. மௌன சாமியாரிடம் இருந்தும் பதில் கிடைக்கவில்லை. மாய சாமியாரின் சந்தேகமும் விலகவில்லை என்பதினால் மறுநாள் ஒரு முடிவுடன் அந்த மௌன சாமியாரிடம் சென்றார். அவரிடம் கூறினார் 'ஸ்வாமி , என் பொறுமையை இனியும் சோதனை செய்யாதீர்கள். உங்களுக்கு பதில் கூற விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லி விடுங்கள். இனியும் நான் உங்களிடம் இது பற்றிக் கேட்க விரும்பவில்லை' என்றார். மாய சாமியார் நடத்தை எப்படி இருந்தது என்றால் அவரிடம் மௌன சாமியார் எதோ கடன் வாங்கி இருந்தவர் போலவும் அதை மாய திருப்பிக் கேட்பதைப் போலவும் நடந்து கொண்டார். ஆனாலும் புன்முறுவலைத் தவிர மௌன சாமியாரிடம் இருந்து வேறு பதில் கிடைக்கவில்லை என்பதினால் அவரை ஏதேதோ நிந்தித்து விட்டு அங்கிருந்து மாய சாமியார் கிளம்பிப் போய் விட்டார்.

அன்று இரவு மாய சாமியாருக்கு தூக்கமே வரவில்லை. அவர் மனதில் ஒரு சிந்தனை ஓடியது. ' நான்தான் தவறு செய்து விட்டேனோ? மெளனமாக இருப்பவரிடம் நான் ஏன் பொய் அனாவசியமாகச் சர்ச்சை செய்தேன்? அரை மணிக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாமல் நாம் இருக்கும்போது நாள் முழுவதும் ஒரே இடத்தில் மெளனமாக அமர்ந்து கொண்டு இருக்கிறாரே, அவர் சக்தி வாய்ந்தவரோ? இத்தனைக்கும் அவர் ஊமையும் இல்லை. இந்த நிலை ஒருநாள், இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக நடக்கிறதே. அது எப்படி முடியும் ? இத்தனைக்கும் அவர் தவத்தில் கூட அமர்ந்து இருக்கவில்லை. கண்களைத் திறந்து வைத்துக் கொண்டல்லவா அமர்ந்திருக்கிறார். நிச்சயமாக அவருக்கு என்னைவிட அபூர்வ சக்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் பல நாட்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டும், மெளனமாக இருந்து கொண்டும் இருப்பது சாத்தியம் அல்ல' .

மறுநாள் காலை விழித்து எழுந்தவர் மடாதிபதியிடம் சென்று கூறினார் ' ஐயா, நான்உங்களுக்கு மூஉன சாமியாரைப் பற்றிக் கொடுத்த தவறான ஆலோசனைக்கு வருந்துகிறேன். தயவு செய்து அந்த மௌன சாமியாரை மீண்டும் இங்கு அழைத்து வந்து அவருக்கு முன்பு போல மீண்டும் இலவசமாக இருக்க இடமும், உண்ண உணவும் கொடுங்கள். வேண்டுமானால் அதற்கான கட்டணத்தை நானே தந்து விடுகிறேன்' என்று கூறி விட்டு மௌன சாமியாரை மீண்டும் மடத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததும் அல்லாமல் அவருடைய சிஷ்யராகவே அவர் மாறி விட்டார். மெல்ல மெல்ல மாய சாமியாரும் மௌன சாமியாராகி அவருடன் தங்கி இருந்தார்.

நீதி:- இதயத்துக்குள் ஆண்டவனோடு எப்போதும் பேசிக் கொண்டு இருப்பவர்களுக்கு, வெளிப் பேச்சு எதற்கு? ஆண்டவன் மீது மனதை ஆழப்பதித்து வைத்துள்ளவனுக்கும், உலகப் பற்றற்றவனுக்கும் அலை பாயும் மனதை அடக்கி வைப்பது கடினம் அல்ல.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...