நாட்டை ஆள்வது நீதிபதிகளின் வேலையல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்எச். கபாடியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது , ” நமது அரசியல் சாசனத்தில், நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் போன்றவ்ற்றுக்கான அதிகாரம் என்ன என்பது தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது. எனவே, நீதித் துறைக்கான அதிகாரத்துக்கு உட்பட்டு நீதிபதிகள் தீர்ப்புவழங்க வேண்டும். நீதி மன்றங்கள் அரசின் நிர்வாகத்தில் தலையிட கூடாது.
கடந்த ஆண்டு யோகாகுரு பாபா ராம்தேவ் நடத்திய உண்ணா விரதம் தொடர்பான_வழக்கில் “தூங்குவது மனிதனின் அடிப்படை உரிமை’ என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். அதாவது, நடுஇரவில் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தவர்களை போலீஸôர் விரட்டியடித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்களின் அடிப்படை உரிமையில் தலையிடுவது, அவர்களை துன்புறுத்துவதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று நீதிபதிகள் ஆலோசனை கூறினால், அரசுகள் அதை ஏற்க மறுக்கின்றன. அப்படி செயல்படுத்த மறுக்கும்போது, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப் வழக்கு தொடுக்க முடியுமா? எனவே, நீதிபதிகள் சட்டத்துக்கு உள்பட்டு தீர்ப்புகளை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நீதிபதிகள் அல்ல. நாட்டை ஆள்வது நீதிபதிகளின் வேலையுமல்ல.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.