கடந்த நான்கு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 142 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டையும் ரத்துசெய்து, பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக பாரதிய .ஜனதா தெரிவித்துள்ளது.
டெல்லியில் கூட்டாக செய்தி யாளர்களை சந்தித்த பாரதிய .ஜனதா தலைவர்களான அருண்ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர்,” நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு தானே முழுபொறுப்பு என கூறிய பிரதமர், அந்த முறைகேட்டிற்கும் தார்மீக பொறுப் பேற்று தனதுபதவியை ராஜினாமா செய்யவேண்டும்.
நிலக்கரி போன்ற முக்கிய தாதுக்களை, மத்திய_அரசின் அனுமதி இன்றி , மாநில அரசுகள் ஒதுக்கமுடியாது எனும் நிலையில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் குறித்து பிரதமர் குறைகூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 142 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் இதற்கான உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இந்த முறை கேட்டின் மூலமாக கிடைத்த பணத்தை கட்சி பணிகளுக்காக காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக பிரதமரின் அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக தாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.