நாட்டை ஆழ்வதற்கு ராகுலுக்கு திறமை இல்லை, அவரால் நாட்டை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை என முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சி கருத்து தெரிவித்துள்ளது .
இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் சிங் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு பொருளாதார பிரச்னைகள், அரசியல் பிரச்னைகள் என பல சவால்களை சந்தித்து வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.ஆனால் இது குறித்தெல்லாம் உருப்படியான எந்தஒரு கருத்தையும் ராகுல்காந்தி தெரிவித்ததில்லை.
இப்படி பட்டவரிடம் எதிர் காலத்தில் அவரை நம்பி நாட்டின் ஆட்சிப்பொறுப்பை எப்படி ஒப்படைப்பது. நேருவின் குடும்பத்து வாரிசு என்பதால், அவரால் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என சிலரால் நம்பப்படுகிறது. ஆனால் எனக்குத்தெரிந்த வரையில் ராகுலிடம் அப்படிப்பட்ட திறமைகள் எதுவும் உள்ளதாக தெரியவில்லை. அவரால் நாட்டை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை என்றார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.