குழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா?

 குழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா? அருண் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) எம்.கே. காந்தி அஹிம்சை நிறுவனத்தை நிறுவியவரும் மகாத்மா காந்தியின் பேரனுமான டாக்டர் அருண் காந்தி, ப்யூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் “குழந்தை வளர்ப்பில் அஹிம்சை” என்கிற பின்வரும் கதையைப் பகிர்ந்துகொண்டார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரிலிருந்து 18 மைல்களுக்கு அப்பால் எனது தாத்தா அமைத்த நிறுவனத்தில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது எனக்கு 16 வயது இருக்கும். நாங்கள் நகரத்தை விட்டு மிகத்தள்ளியிருந்த காரணத்தால் எங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்போர் யாருமில்லை. ஆகையால் நானும் எனது இரு சகோதரிகளும் நகரத்திற்குப் போகும் சந்தர்ப்பத்தை மிகவும் எதிர்நோக்கிக் காத்திருப்போம். ஏனென்றால் அப்போதுதான் நாங்கள் எங்களின் நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது திரைப்படத்திற்கோ போகமுடியும்.

ஒருநாள், எனது தந்தையார் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக என்னை நகரத்திற்கு கார் ஓட்டி வருமாறு அழைத்தபோது, நான் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். நான் நாள் முழுவதும் நகரத்தில் இருக்கவேண்டியிருந்ததால் எனது தாயார் தனக்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் பட்டியலையும், எனது தகப்பனார் நகரத்தில் முடிக்கவேண்டிய சிறு சிறு வேலைகளையும் அளித்தனர். அதில் ஒன்று கார் பழுது பார்ப்பது. எனது தந்தையை காலையில் கூட்டத்திற்கு இறக்கிவிடும்போது ‘மாலை 5 மணிக்கு உன்னை இங்கே சந்திக்கிறேன். இருவரும் சேர்ந்தே வீட்டிற்குப் போவோம்’ என்றார்.

எனக்களிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்தபின் நான் அருகிலிருந்த ஒரு திரை அரங்கத்திற்குச் சென்றேன். ஜான்வெய்ன் இரட்டை வேடத்தில் நடித்த அந்தத் திரைப்படத்தை நான் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் வந்தபோது பார்த்தால் மணி 5.30. நான் வேகமாக கார் பழுது பார்க்கும் இடத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு எனது தந்தை நிற்கச் சொன்ன இடத்திற்கு விரைந்தேன். நான் அங்கு சென்றபோது மணி 6.00. அவர் ‘ஏன் தாமதமாக வந்தாய்?’ என்று என்னைக் கேட்டார். அவர் ஏற்கனவே கார் பழுதுபார்க்கும் இடத்திற்குப் போன் செய்திருந்ததை அறியாத நான், ‘ஜான்வெய்ன் நடித்த படத்தைப் பார்த்தேன் அதனால்தான்’ என்று சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு ‘கார் சரிசெய்யக் காத்திருக்கவேண்டியிருந்தது’ என்று சொன்னேன்.

நான் பொய்சொன்னதைக் கண்டுபிடித்த அவர் ‘உண்மையைத் தைரியத்துடன் கூற முடியாமல் வளர்த்திருக்கும் எனது வளர்ப்பு முறை மீதுதான் ஏதோ தவறு இருக்கிறது. அந்தத் தவறு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்காக நான் 18 மைல்கள் யோசனை செய்துகொண்டு நடந்தே வீட்டிற்குப் போகப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு இருட்டாக இருந்த அந்த சாலையில் நடக்க ஆராம்பித்தார். அவரை விட்டுப் போகமுடியாமல் ஐந்தரை மணி நேரம் அவர் பின்னாலேயே காரை ஓட்டிக்கொண்டு நான் சொன்ன சிறு பொய்க்காக எனது தந்தை அடைந்த மனவேதனையைப் பார்த்துக்கொண்டே சென்றேன். இனி ஒருபோதும் பொய் சொல்லப் போவதில்லை என்று, அன்று, அப்போதே முடிவுசெய்தேன்.

இந்நிகழ்ச்சியை அடிக்கடி நினைத்துப் பார்த்து நான் வியப்பதுண்டு. இப்போது நாம் நம் குழந்தைகளைத் தண்டிக்கும் வழியில் அவர் என்னைத் தண்டித்திருந்தால் நான் இந்தப் பாடத்தைக் கற்றிருப்பேனா? முடியாது என்றே நினைக்கிறேன். அந்தத் தண்டனையை வாங்கும்போது வலித்திருக்கும், ஆனால் மறுமுறை அதே தவறைச் செய்திருப்பேன். வன்முறையற்ற அவரது இந்த ஒரு செயலின் மாபெரும் சக்தியானது இன்னும் என்னுள் நிலைகொண்டு என்னை வழிநடத்துகிறது. இதுவே அஹிம்சையின் சக்தி ஆகும்.

நன்றி தமிழில் முனைவர் இரா. உமா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...