பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்படும்

பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்படும்  பா.ஜ.க. மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்கு நாட்டின் சர்வதேச எல்லைகளை, “சீல்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர், நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

இந்திய – சீன போரின், 50 ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு , அசாம் மாநிலம் கவுகாத்தியில், பா.ஜ.க நேற்று பேரணியை தொடங்கியது இதை துவங்கி வைத்து கட்காரி பேசியதாவது: ஒருவர் எந்த ஒருநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றாலும் , விசா உள்ளிட்ட பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் . ஆனால் நமது_நாட்டின் சர்வதேச எல்லைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. அண்டை நாடுகளிலிருந்து, ஏராளமானோர் சட்டவிரோதமாக, நம் நாட்டிற்குள் ஊடுருவி, நிலம் , சொத்துக்கள் போன்றவற்றை வாங்குகின்றனர். சட்டவிரோதமாக வந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்தால் , காங்கிரஸ் அரசு, அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. “நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம்; உங்களுக்கு வேண்டியதை செய்துதருகிறோம்; ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு விடுங்கள்’ என கூறி, அவர்களை வரவேற்கிறது. சட்டவிரோத ஊடுருவல், நாட்டின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஓட்டுவங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் இதை ஆதரிக்கிறது.

நமது எல்லை பகுதிகள் எல்லாம், பாதுகாப் பாற்ற நிலையில் உள்ளன. 1962, இந்திய – சீன போரின்போது இருந்த, குறைபாடுகள் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோன்ற தவறுகள், மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அசாமின் தற்போதைய காங்கிரஸ் முதல்வர், தருண்கோகோய் உள்ளிட்ட , இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், சட்டவிரோத ஊடுருவலை ஆதரிக்கின்றனர்.

பா.ஜ.க, மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத ஊடுருவலை தடுப்பதற்கு , சர்வதேச எல்லைகளை, “சீல்_வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . தன்னை சுற்றி உள்ள அண்டை நாடுகள் எல்லாம், பகைநாடுகளாக உள்ளதால் , இஸ்ரேல் தங்கள்நாட்டின் எல்லைகளை எல்லாம், “சீல்’ வைத்துள்ளது. அதே போன்று , நாமும் செய்யவேண்டும். என்று கட்காரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...