குஜராத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குஜராத் மாநில முக்கிய காங்கிரஸ் புள்ளியும் , அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான ஆசீபா கான் பா.ஜ.,வில் தன்னை இணைத்துகொண்டார். இதன் மூலம் பா.ஜ.க,. சிருபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற கருத்து சுக்கு நூறாகியுள்ளது
சிறுபான்மை பிரிவைசேர்ந்த இவர் தேசிய மகளிர் காங்கிரஸ் அமைப்பிலும் முக்கியபங்கு வகித்தவர் ஆவார்.
பாரதிய ஜனதாவில் சேர்ந்த இவரிடம் பத்திரிக்கையாளர்கள் 2002 கலவரம் குறித்து கேள்விகேட்டனர். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட யாராகயிருந்தாலும் அது எனக்கு பெரும் மனவலியை தந்தது. இதுபோன்ற கலவரம் இனி நடக்காமல் சமூகம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு உரியதண்டனை பெற்றுகொடுக்க வேண்டும். சட்டத்தின் மூலம் நீதிபெறுவார்கள். 2002க்கு முன்பும் இதுபோன்று கலவரம் நடந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம் என்றார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பாரூச் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசீபா கான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
ஒரு பத்திரிக்கையாலறன ஆசீபா கான் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலின் மூலம், அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். இவரது வருகையை வரவேற்றுள்ள பாஜக ., எம்.பி. விஜய் ரப்பாணி; பாரதிய ஜனதா அனைவரையும் சமமாக நடத்துகிறது என்பதற்க்கு இவரது வருகையே ஒரு நல்ல சான்று. சிறுபான்மை மக்கள் பாஜக கொள்கை மற்றும் மோடியின் செயல்பாடுகளால் கவரப் படுகின்றனர் என்றார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.