இமாச்சல பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர், வீரபத்ரசிங் மீது, பா ஜ க , புதிய ஊழல் புகார்களை தெரிவித்துள்ளது . அந்த புகார்களின்பேரில், சிறப்பு புலனாய்வுகுழு, விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது .
காங்கிரஸ் கட்சி சார்பில், முதல்வராக வாய்ப்பு உள்ள , “மாஜி’ முதல்வர், வீரபத்ரசிங் மீது, தொடர்ந்து பல முறைகேடுகள் வெளியாகிவருகிறது.கடந்த, 2010ம் ஆண்டு , உருக்கு நிறுவனத்தில், பலகோடி ரூபாய் பணம் பெற்றார் என்று , “டிவி’ ஒன்று, சில நாட்களுக்கு முன்பு , செய்திவெளியிட்டது. அந்த நிறுவனத்திடமிருந்து, சிபிஐ., கைப்பற்றிய ரகசியடைரி குறிப்புகளை வெளியிட்டு, வீரபத்ர சிங்குக்கு நெருக்கடி உருவாக்கியது
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, அருண் ஜெட்லி கருத்து தெரிவித்ததாவது: போலி கையெப்ப முறைகேடு, மோசடித்தனமாக பணம்சேர்த்தல், லஞ்சம் பெற்றது, வருமானவரி ஏய்ப்பு செய்தது என்று , பல முறைகேடுகளை செய்துள்ளார் வீரபத்ரசிங். 2008லிருந்து, வருமான வரிகணக்கு விவரங்களை திருத்தி, 6.5 கோடி ரூபாய் சேர்த்ததை, குறைத்து காண்பித்துள்ளார்
வீரபத்ர சிங்கின் இந்த முறைகேடுகளை, காங்கிரஸ் கட்சி தலைவர், சோனியா காந்தி அறிந்திருந்தால், அவருடன் இணைந்து__மேடையில் தோன்றியிருக்க மாட்டார். அப்படி அதையும் சோனியா காந்தி தெரிந்திருந்தால், அவர், பிறகட்சிகள் மீது, ஊழல் புகார் தாக்குதல் நடத்தியிருக்கமாட்டார்.வீரபத்ரசிங் மீதான ஊழல் புகார்களை, சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க வேண்டும். சிபிஐ., விசாரிக்க கூடாது. ஏனென்றால் , 2010ல் கைப்பற்றப்பட்ட டைரியில், சிபிஐ., மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று அருண் ஜெட்லி தெரிவித்தார் .
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.