காதல் விவகாரங்களில் கைதேர்ந்த, சசிதரூருக்கு, மனிதவள மேம்பாட்டு துறைக்கு பதில் , காதல் விவகாரத் துறை’ எனும் பெயரில், புதிதாக ஒருதுறையை உருவாக்கி, அந்ததுறையின் அமைச்சர் பொறுப்பை, அவருக்கு தந்திருக்கலாம், என்று பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ்நக்விகருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; சசி தரூர், காதல் விஷயங்களில் கைதேர்ந்தவர். அவரை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு இணைஅமைச்சராக நியமித்திருக்க கூடாது. சர்வதேச அளவிலான, காதல்விவகாரங்களில் கைதேர்ந்த அவருக்காக, “காதல் விவகாரத்துறை’ எனும் புது துறையை உருவாக்கி, அந்த துறைக்கு அமைச்சராக அவரை நியமித்திருக்கவேண்டும்.என்று முக்தர் அப்பாஸ்நக்வி தெரிவித்தார்.
சசிதரூர் ஏற்கனவே, கிறிஸ்டினா , திலோத்தமா என இரண்டு பெண்களை மணந்து, விவாகரத்துசெய்தவர். மூன்றாவதாக, சுனந்தா புஷ்கரை திருமணம்செய்தார். ஐபிஎல். கிரிக்கெட் கொச்சி அணியை ஏலம்எடுத்த ரெண்டஸ்வஸ் நிறுவனம் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு 25 சதவீத பங்குகளை ஒதுக்கியது . இதில் 70 கோடி_ரூபாய் மதிப்புள்ள 19% பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டவை. இந்த விவகாரத்தால் சசி தரூருக்கு சிக்கல் உருவானது . இதனால், அமைச்சர் பதவியை இழந்த அவரை, காங்., மேலிடம் மீண்டும் தற்போது, அமைச்சராக்கி யுள்ளது. என்பது குறிப்பிட தக்கது
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.