மத்திய தணிக்கைகுழு தன்னாட்சி பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பு. இந்த அமைபபுக்கு மேலும் கூடுதலாக மூன்று பேரை உறுப்பினராக நியமிப்பது குறித்து யோசிப்பது இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதர்க்கான முயற்சி என்று பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; மத்திய தணிக்கைக் குழு மூலம் தான் 2ஜிவிவகாரம் வெளிவந்தது. எப்போதெல்லாம் காங்கிரஸ்சின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ அப்போதெல்லாம் அதை திசைதிருப்புவதற்காக சட்டப் பூர்வமான அமைப்புகளை பலவீனப்படுத்துவதில் காங்கிரஸ் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்று தான்.
ஏற்கனவே தேர்தல்கமிஷனை பலவீனப்படுத்தினார்கள். சட்டப்பூர்வ அமைப்புகளை பலவீனப்படுத்துவதின் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை காங்கிரஸ் சந்தித்தே ஆகவேண்டும். அவசரகால நிலைமையை போல்தான் காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. பா.ஜ.க தலைவர்கள் கட்காரி, மோடி குறித்து ஆர்எஸ்எஸ். தலைவர்களில் ஒருவர் வெளியிட்டிருக்கும் கருத்து அவரது சொந்தகருத்தாக இருக்கலாம். பா.ஜ.க ஆர்எஸ்எஸ்.க்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் கிடையாது இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.