இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் பால் தாக்கரே. 1926- ஜனவரி , 23-ம் தேதி, புனே நகரில் பிறந்தார்.
பால்தாக்கரே. அதிரடி அரசியலுக்கு பெயர்பெற்றவர். கார்ட்டூனிஸ்ட்டாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர் , ஆரம்ப காலத்தில் தி ப்ரீ பிரஸ் ஜர்னல் எனும் ஆங்கில நாளிதழில், "கார்ட்டூனிஸ்ட்' ஆக
பணிபுரிந்தார். பிறகு 1960ல் சொந்தமாக, "மர்மிக்' எனும் வார இதழை தொடங்கினர் .
அரசியல் கார்ட்டூன்களை "மர்மிக்' இதழில் வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார் .1966, ஜூன் 19ம் தேதி, சிவசேனா கட்சியை துவங்கினார். 1989ல் சிவசேனாவின் சார்பில், "சாம்னா' என்ற பத்திரிகையும் துவங்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் வாழும் மராட்டியர்களின் உரிமைக்கு அவர் முன்னுரிமை தந்தார் . மகாராஷ்டிரா எனும் தனிமாநிலம் உருவாகவும் அவர் போராடினார். இந்திய பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் சீரழிக்க வழிவகுக்கும் எந்த ஒரு செயலையும் அவர் கடுமையாக எதிர்த்தார். அப்படி முயற்சி செய்தவர்களையும் அவர் கடுமையாக கண்டித்தார். காதலர் தினம்த்தை வெளிப்படையாக எதிர்த்து சிவசேனாவின் அதிகார பூர்வ பத்திரிகையான 'சாம்னா'-வில் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டார்.
இந்தியா, இந்து மத ஆதரவு கொள்கைளை அவர் தனது கட்சியின் மூலம் வெளிப்படுத்தி வந்தார். நாளடைவில் சிவசேனா மும்பை நகரில் இந்துக்களுக்கும், ஆன்மிக வாதிகளுக்கும் பாதுகாப்பானகட்சி என்ற பெயரை பெற்றது.
இந்து மத ஆதரவு கொள்கை கொண்ட, சிவசேனாவை படிப்படியாக வளர்த்து, மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக மாற்றியபெருமை, பால்தாக்கரேயை சேரும். உணர்ச்சிவசப்பட வைக்கும்பேச்சு, தடாலடி அரசியல் நடவடிக்கைகள், தீவிர போராட்டங்கள் போன்றவை, பால்தாக்கரேயின் அடையாளம்.பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் சிவசேனாகட்சி, ஆட்சியை பிடித்தாலும், பால்தாக்கரே பதவிக்கு ஆசைப்படவில்லை. தனது ஆதரவாளரான, முரளிமனோகர் ஜோஷியை, முதல்வராக்கி அழகு பார்த்தார். இதுவரைக்கும் எந்த தேர்தலிலும், தாக்கரே போட்டியிட்டதில்லை.
பால் தாக்கரே மனைவி, மீனா, மாரடைப்பின் காரணமாக, 1995ம் ஆண்டு காலமானார். தாக்கரேயின் மூத்த மகன், பிந்துமாதவ் 1996ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெய தேவ், உத்தவ் என்று இரண்டு மகன்கள் தற்போது உள்ளனர். இவர்களில், உத்தவ்தாக்கரே, சிவசேனாவின் செயல் தலைவராக பதவி வகிக்கிறார்.
பால்தாக்கரேயின் இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன்தான், ராஜ்தாக்கரே. தொடக்கத்தில் சிவசேனாவில் இருந்த இவர், உத்தவ் தாக்கரேயுடன் உருவான கருத்துவேறுபாடு காரணமாக, அந்த கட்சியிலிருந்து வெளியேறி, மகாராஷ்டிரா நவநிர்மாண்சேனா எனும் கட்சியை தொடங்கியுள்ளார்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.