28-5-1883, இந்நாள் சரித்திரப் பக்கங்களில் வைரங்களினால் பதிக்கப்பட வேண்டிய ஒரு பொன்னான திருநாள். அப்படி என்ன சிறப்பு இத்தினத்திற்கு?
28-5-1883 அன்று தான், சுதேசிய சிங்கம் ஒன்று, விதேசிய
ஆங்கிலேய குள்ள நரிகளை ஓட, ஓட விரட்டிடவும், அவ்ரங்கசீப்பின் ரூபத்தில் சுற்றித்திரிந்த ஜிகாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்திடவும், பாரதப் புன்னிய தேசத்தில் வந்து அவதரித்த வீரத்திருநாள். அந்த சுதேசிய சிங்கம் வேறுயாருமல்ல, வீர் சாவர்க்கர் என்று அனைவராலும் அன்போடும், பெருமையோடும் அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் தான்.
மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகூர் என்ற சிறிய கிராமத்தில், தாமோதர் பந்த் – ராதாபாய் என்னும் தம்பதியருக்கு இரண்டாவது மகனாய் பிறந்தவர் தான் நம் விநாயக் தாமோதர் சாவர்க்கர். விநாயக் சாவர்க்கருக்கு கணேஷ் சாவர்க்கர் என்ற அண்ணனும், மைனாபாய் என்ற தங்கையும், நாராயண சாவர்க்கர் என்ற தம்பியும் இருந்தனர்.
குழந்தைப் பருவத்திலேயே சாவர்க்கர் தேச பக்தியிலும், தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்கினார். இதற்கு முக்கிய காரணம், சாவர்க்கரின் பெற்றோர் தான். சாவர்க்கரின் தாயாரான ராதாபாய், சாவர்க்கருக்கு மகாபாரதம், ஹரி விஜயம், ராம விஜயம் போன்ற பக்தி நூல்களையும், தந்தையாரான தாமோதர் பந்த், சம்சய ரத்ன மாலா என்னும் பக்தி காவியத்தையும் சாவர்க்கருக்கு படித்துக்காட்டுவார். இந்நூல்களின் கருத்துக்கள் அனைத்துமே சிறுவனாக இருந்த சாவர்க்கரின் மனதில் வேரூன்றி பதிந்தது.
சாவர்க்கர் தன் தந்தையாரைப் போலவே, குழந்தைப் பருவம் முதல் கவிதை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
போதுவாகவே மராட்டிய குழந்தைகள், ஓவி என்னும் மாராட்டிய சந்தத்தில் தான் கவிதைகள் பாடுவது வழக்கம். நம் சாவர்க்கரும், ஓவியில் சிறந்து விழங்கினார்.
குழந்தைகளிடையில் ஓவி கவிதைப் போட்டி வைத்து, அதில் சாவர்க்கர் கலந்து கொண்டால், போட்டி ஆரம்பிக்கும் முன்பே சாவர்க்கர் வெற்றிப் பெற்றுவிட்டதாக அறிவித்து விடலாம். அந்த அளவுக்கு ஓவி கவிதைகள் சாவர்க்கருக்கு அத்துபடி.
குழந்தையாக இருந்த சாவர்க்கர் எழுதிய கவிதைகள், ஜகத்திதேச்சு என்ற பத்திரிக்கையிலும் வெளிவந்திருக்கிறது. ஆனால், பத்திரிக்கை ஆசிரியருக்கு கவிதைகள் எழுதி அனுப்புவது ஒரு 10 வயது குழந்தை என்பது தெரியாது! சாவர்க்கரின் கவிதை நடையும், கருத்தும், ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த கவிஞன் எழுதுவது போல இருந்ததால், பத்திரிக்கை ஆசிரியருக்கு வயது பற்றிய எண்ணம் தோன்ற வாய்ப்பில்லாமல் போனது.
சாவர்க்கரின் தெய்வ பக்தியை வளர்ப்பதில் பக்தி காவியங்கள் எவ்வாறு துணைப்புரிந்ததோ, அதே போல, சாவர்க்கரின் தேசப் பக்தியை வளர்க்க பெரிதும் உதவியது, வீர சிவாஜியின் வரலாறு. சிவாஜியின் வரலாறு, போஷ்வாக்களின் வரலாறு போன்ற வரலாற்று நூல்களை அதிக ஆர்வமுடன் சாவர்க்கர் படிக்க ஆரம்பித்தார். இதுமட்டுமல்ல, பாரத தேசத்தின் அன்றைய அரசியல் மற்றும் சுதந்திரப் போராட்ட சூழ்நிலைகளை அறிந்து கொள்ள, திலகரின் கேசரி பத்திரிக்கையையும் சாவர்க்கர் படிக்க ஆரம்பித்தர். தான் படித்தறிந்த செய்திகளை, தன்னுடன் மட்டும் வைத்திராமல், தன் நண்பர்களுடனும் அச்செய்திகளை பகிர்ந்து கொள்வார்.
இந்து தர்மத்திற்கும், பாரத தேசத்திற்கும் மிகப் பெரிய தீங்கு விளைவித்த, விளைவிக்கிற சாதி வேற்றுமைகளை குழந்தை பருவம் முதல் எதிர்த்தவர், சாவர்க்கர். சாவர்க்கர் பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், சாதி வேற்றுமைகளும், கொடுமைகளும் கோடிக் கட்டிப் பறந்த அக்காலத்திலும், சாவர்க்கர் சாதி பேதமில்லாமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார். சாவர்க்கருக்கு சாதி பேதமின்றி, அனைத்து சாதிகளிலும் நண்பர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1892ல் சாவர்க்கரின் தாய் ராதாபாய் இறைவனடி சேர்ந்தார். தாய் இறந்தபோது, சாவர்க்கருக்கு 9 வயது தான் ஆகியிருக்கிறது. ராதாபாய் அவர்களின் இறப்பு, சாவர்க்கர் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
நான்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, தாமோதர் பந்த் அவர்களின் தலையில் விழுந்தது. அச்சமயத்தில், பந்த் சுமார் 40 வயதைத்தான் கடந்திருந்தார். பலறும் பந்த் அவர்களை மறுமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால், ராதாபாய் இருந்த இடத்தில் வேறோரு பெண் வருவதை, பந்த்தால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால், மறுமணம் செய்யும் யோசனையை நிராகரித்துவிட்டார். அதே சமயம், ஒரு தாய் தன் குழந்தைகளை எவ்வாறு கவணித்துக் கொள்வாரோ, அதைவிட 100% மடங்கு, தாமோதர் பந்த் அவர்கள், தன் நான்கு குழந்தைகளையும் தந்தையாகவும், தாயாகவும் இருந்து கவனித்துக் கொண்டார்.
1893-1894, மகாராஷ்ட்ராவில் முஸ்லீம் – இந்து கலவரங்கள் பரவிக் கொண்டிருந்தது
தொடரும்………..
நன்றி; பாரத் வாய்ஸ் சுஜின்; திகம்பரி
TAGS; சாவர்க்கர், சுதேசிய சிங்கம், வினாயக் தாமோதர் சாவர்க்கர், வீர சவர்க்கார், வீர சாவர்க்கர், வீர சாவர்க்கர் வரலாறு, வீரசாவர்க்கர், வீர் சாவர்க்கர்
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.