தனது உறவினருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கிய வழக்கில் கேரள மாநில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சேர்த்துள்ளனர்.
கடந்த 2006-2011ம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த
அச்சுதானந்தன் தனது உறவினர் சோமன் என்பவருக்கு விதி முறைகளை மீறி 2.3 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியுள்ளார். இந்நிலையில் ஆட்சி மாறியதும் இந்த முறைக்கேட்டை கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அச்சுதானந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கேரள அரசின் சார்பில் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒருஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது ; காசரக் கோட்டைச் சேர்ந்த உறவினருக்கு அச்சுதானந்தன் அரசுநிலத்தை முறைகேடாக வழங்கியதுதொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்துவிட்டது. இதுதொடர்பாக விரைவில் குற்ற ப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும். இதில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.மேலும் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ராஜேந்திரன் உளிட்ட மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.